Close Menu
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • முகப்பு
  • உணவகங்கள்
  • அடுமனை / பேக்கரி
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • சங்கங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • அயலக உணவகங்கள் 
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
  • எங்களை தொடர்பு கொள்ள
  • English News
சூடான செய்திகள்

பாரதத்தின் பண்டைய தானியங்களும், மசாலாப் பொருட்களும், ஏன் உலகின் நாவை சுவைக்கின்றன?

May 15, 2026

சர்வதேச விமான நிலைய அந்தஸ்து மற்றும் மருத்துவ சுற்றுலாவால் புதிய உத்வேகம் பெறும் மதுரை ஹோட்டல் துறை

April 11, 2026

கடலூரில் முதல் கிளையைத் தொடங்கியது ‘நானாஸ்’ இனிப்பகம்

April 4, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook Instagram YouTube LinkedIn
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • முகப்பு
  • உணவகங்கள்
  • அடுமனை / பேக்கரி
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • சங்கங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • அயலக உணவகங்கள் 
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
  • எங்களை தொடர்பு கொள்ள
  • English News
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • அடுமனை / பேக்கரி
  • அயலக உணவகங்கள் 
  • உணவகங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
Home»உணவகங்கள்»‘சங்கீதா’ உணவகம் தொடர்ந்த வழக்கு: ‘கீதம்’ உடன் சமரசமா? சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
உணவகங்கள்

‘சங்கீதா’ உணவகம் தொடர்ந்த வழக்கு: ‘கீதம்’ உடன் சமரசமா? சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

'சங்கீதா' உணவகம் தொடர்ந்த வழக்கு: 'கீதம்' உடன் சமரசமா? சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
Shalini ChandrasekarBy Shalini ChandrasekarJanuary 24, 2026No Comments2 Mins Read18 Views
Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link
Sangeetha Restaurant, Geetham Veg Restaurant, Madras High Court, Trademark Infringement, Rasnam Foods, Chennai News, சங்கீதா உணவகம், கீதம் உணவகம், சென்னை உயர்நீதிமன்றம்.
Share
Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link

சென்னையின் பிரபல உணவகச் சங்கிலியான ‘சங்கீதா’ (Sangeetha) மற்றும் அதன் முன்னாள் ஃபிரான்ச்சைஸி (Franchisee) நிறுவனமான ‘கீதம்’ (Geetham) ஆகியவற்றுக்கு இடையிலான வர்த்தக முத்திரை (Trademark) மீறல் வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்தார். அதே சமயம், இரு தரப்பினரும் நீதிமன்றத்திற்கு வெளியே சமரசமாகப் போக விரும்பினால் அதற்கு அனுமதி அளிப்பதாகவும், சமரசம் ஏற்பட்டால் அது குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கும் பின்னணியும்

சங்கீதா கேட்டரர்ஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.கே. ஸ்ரீராம் ஆஜராகி வாதிட்டார். அவர் முன்வைத்த முக்கிய வாதங்கள் பின்வறுமாறு… 1985-ல் பி.சுரேஷ் மற்றும் பி.ராஜகோபால் ஆகியோரால் தொடங்கப்பட்ட ‘சங்கீதா’, இன்று 29 உள்நாட்டு கிளைகள் மற்றும் 21 வெளிநாட்டு கிளைகளுடன் பெரும் நற்பெயரைப் பெற்றுள்ளது.

2009 முதல் ராஸ்னம் புட்ஸ் (Rasnam Foods) நிறுவனத்திற்கு வேளச்சேரி, துரைப்பாக்கம், மேடவாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சங்கீதா உணவகங்களை நடத்த ஃபிரான்ச்சைஸி உரிமை வழங்கப்பட்டது. மே 31, 2022 அன்று இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிய ராஸ்னம் புட்ஸ், அடுத்த நாளிலிருந்தே (ஜூன் 1) அதே இடங்களில் ‘கீதம்’ என்ற பெயரில் உணவகங்களை தொடங்கியது. சங்கீதா என்ற பெயரின் நற்பெயரைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், அதிலிருக்கும் ‘கீதம்’ என்ற பெயரை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

கீதம் தரப்பு விளக்கம்

ராஸ்னம் புட்ஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ராமன் கூறியதாவது, மேடவாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக நஷ்டம் ஏற்பட்டதால், அந்த உணவகத்தை வேறு இடத்திற்கு மாற்ற அனுமதி கோரினோம். ஆனால் சங்கீதா நிர்வாகம் அதற்கு மறுத்ததால் இந்த மோதல் உருவானது.

நாங்கள் வெற்றிகரமாக ஒரு வருடம் ‘கீதம்’ உணவகங்களை நடத்திய பிறகே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்பணமாக வாடகை செலுத்தியிருந்த காரணத்தாலேயே அதே இடங்களில் உணவகங்களைத் தொடர்ந்தோம்.

சங்கீதா உணவகத்திற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று முன்னணி நாளிதழ்களில் முழுப் பக்க விளம்பரங்களை வழங்கியுள்ளோம். நீதிமன்ற உத்தரவுப்படி லோகோ நிறங்களையும் மாற்றியுள்ளோம்.

சமரசப் பேச்சுவார்த்தை

வழக்கின் இறுதியில், இழப்பீடுத் தொகையாக சங்கீதா தரப்பு ₹130 கோடி கோரியிருப்பதாகத் தெரிகிறது. ஆனால், இந்தத் தொகை ₹3 கோடி அளவில் இருந்தால் சமரசத்திற்கு வாய்ப்பிருப்பதாக கீதம் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.

Chennai News Geetham Veg Restaurant Madras High Court Rasnam Foods Sangeetha Restaurant Trademark Infringement கீதம் உணவகம் சங்கீதா உணவகம் சென்னை உயர்நீதிமன்றம்.
Share. Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link
Previous Articleமதுரை நெடுஞ்சாலைகளில் 2 புதிய உணவகங்கள் திறக்க இருக்கும் ‘ஹோட்டல் டெம்பிள் சிட்டி
Next Article பட்ஜெட் 2026: ஹோட்டல் துறைக்கு ‘Infrastructure’ அந்தஸ்து கிடைக்குமா? இந்திய ஹோட்டல் அதிபர்களின் எதிர்பார்ப்பு!
Shalini Chandrasekar

    தொடர்புடைய பதிவுகள்

    சர்வதேச விமான நிலைய அந்தஸ்து மற்றும் மருத்துவ சுற்றுலாவால் புதிய உத்வேகம் பெறும் மதுரை ஹோட்டல் துறை

    April 11, 2026

    கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசுக்கு ஹோட்டல் சங்கங்கள் அவசர கடிதம்

    March 11, 2026

    சுற்றுலா பயணிகளை தஞ்சை நோக்கி படையெடுக்க வைத்த ‘பொன்னியின் செல்வன்’ – ’மெய்யழகன்’!

    February 12, 2026

    கர்நாடகாவில் தனது ஹோட்டல் சேவையை விரிவாக்கம் செய்யும் தி ஃபெர்ன்: பெலகாவியில் 2-வது கிளை தொடக்கம்

    February 11, 2026
    Leave A Reply Cancel Reply

    தேடுங்கள்
    Follow Us On Social Media
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    சமீபத்திய முக்கிய செய்திகள்
    Uncategorized
    5 Mins Read2 Views

    பாரதத்தின் பண்டைய தானியங்களும், மசாலாப் பொருட்களும், ஏன் உலகின் நாவை சுவைக்கின்றன?

    By Swaminathan BalasubramanianMay 15, 20260

    — ஆர். சங்கரன் கர்நாடகத்தின் கேழ்வரகு வயல்களிலிருந்து சிங்கப்பூரின் உயரிய கடைகள் வரை — பாரதத்தின் பண்டைய தானியங்களும் பாரம்பரிய…

    சர்வதேச விமான நிலைய அந்தஸ்து மற்றும் மருத்துவ சுற்றுலாவால் புதிய உத்வேகம் பெறும் மதுரை ஹோட்டல் துறை

    April 11, 2026

    கடலூரில் முதல் கிளையைத் தொடங்கியது ‘நானாஸ்’ இனிப்பகம்

    April 4, 2026

    பனிக்கூழ் உலகில் இரு தசாப்தங்கள் தொடும் ஒரு சகாப்தம்; ‘சாம்பியன் ‘ இனி டெல்டா முழுவதும்

    March 17, 2026
    வலைப்பதிவு வகைகள்
    • Uncategorized (6)
    • அடுமனை / பேக்கரி (4)
    • அயலக உணவகங்கள்  (1)
    • உணவகங்கள் (28)
    • உணவு உற்பத்தியாளர்கள் (8)
    • சங்கங்கள் (10)
    • விநியோகஸ்தர்கள் (4)
    வலைப்பதிவு காப்பகங்கள்
    • May 2026 (1)
    • April 2026 (2)
    • March 2026 (4)
    • February 2026 (20)
    • January 2026 (21)
    • December 2025 (3)
    • November 2025 (7)
    கிச்சன் ஹெரால்ட்
    கிச்சன் ஹெரால்ட்

    கிச்சன் ஹெரால்ட் என்பது இந்திய சமையல்காரர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், உணவு கையாளுபவர்கள் சமூகம் மற்றும் உலகளாவிய சமையல் சமூகத்திற்கான முன்னணி B2B டிஜிட்டல் ஊடகமாகும். நாங்கள் உலகளாவிய உணவுத் துறையைக் கண்காணித்து, எங்கள் வாசகர்களுக்கு சமீபத்திய செய்திகள், வேலை காலியிடங்கள் நேர்காணல்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்குகிறோம். முக்கியமாக ஹோட்டல் உரிமையாளர்கள், சமையல்காரர்கள், பேக்கரி உரிமையாளர்கள், உணவு உற்பத்தியாளர்கள், கொள்முதல் மேலாளர்கள், விநியோகஸ்தர்கள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் பலவற்றைச் சென்றடையும் நாங்கள், HoReCA பிரிவுக்கு மிகவும் விரும்பப்படும் உணவு போர்டல்.

    Facebook Instagram YouTube LinkedIn
    வலைப்பதிவு வகைகள்
    • Uncategorized (6)
    • அடுமனை / பேக்கரி (4)
    • அயலக உணவகங்கள்  (1)
    • உணவகங்கள் (28)
    • உணவு உற்பத்தியாளர்கள் (8)
    • சங்கங்கள் (10)
    • விநியோகஸ்தர்கள் (4)
    பயனுள்ள இணைப்புகள்
    • முகப்பு
    • எங்கள் எழுத்தாளர்கள்
    • எங்கள் நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
    • எங்களை தொடர்பு கொள்ள
    • தனியுரிமைக் கொள்கை
    பதிப்புரிமை © 2021-2026 - கிச்சன் ஹெரால்ட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
    உங்கள் நிறுவனத்திற்கான தொழில்முறை வலைத்தளத்தை DotBrix இலிருந்து பெறுங்கள்.

    Type above and press Enter to search. Press Esc to cancel.