Close Menu
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • முகப்பு
  • உணவகங்கள்
  • அடுமனை / பேக்கரி
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • சங்கங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • அயலக உணவகங்கள் 
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
  • எங்களை தொடர்பு கொள்ள
  • English News
சூடான செய்திகள்

பாரதத்தின் பண்டைய தானியங்களும், மசாலாப் பொருட்களும், ஏன் உலகின் நாவை சுவைக்கின்றன?

May 15, 2026

சர்வதேச விமான நிலைய அந்தஸ்து மற்றும் மருத்துவ சுற்றுலாவால் புதிய உத்வேகம் பெறும் மதுரை ஹோட்டல் துறை

April 11, 2026

கடலூரில் முதல் கிளையைத் தொடங்கியது ‘நானாஸ்’ இனிப்பகம்

April 4, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook Instagram YouTube LinkedIn
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • முகப்பு
  • உணவகங்கள்
  • அடுமனை / பேக்கரி
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • சங்கங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • அயலக உணவகங்கள் 
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
  • எங்களை தொடர்பு கொள்ள
  • English News
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • அடுமனை / பேக்கரி
  • அயலக உணவகங்கள் 
  • உணவகங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
Home»உணவகங்கள்»மதுரை நெடுஞ்சாலைகளில் 2 புதிய உணவகங்கள் திறக்க இருக்கும் ‘ஹோட்டல் டெம்பிள் சிட்டி
உணவகங்கள்

மதுரை நெடுஞ்சாலைகளில் 2 புதிய உணவகங்கள் திறக்க இருக்கும் ‘ஹோட்டல் டெம்பிள் சிட்டி

ஹை-வேக்களில் கவனம் செலுத்தும் மதுரை 'டெம்பிள் சிட்டி' ஹோட்டல்... எம்.டி அபிராம் விகாஸ் பேட்டி...
Shalini ChandrasekarBy Shalini ChandrasekarJanuary 22, 2026No Comments3 Mins Read770 Views
Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link
Temple City Hotel, Madurai Food, Highway Restaurants, Success Story, Abiram Vikas, Madurai Parotta
அபிராம் விகாஸ்
Share
Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link

-ஷாலினி சந்திரசேகர்

தமிழகத்தின் பரபரப்பான நகரம் என்றாலே நினைவுக்கு வருவது மதுரை தான். இங்கு 24 மணிநேரமும் நகரம் முழுவதும் படு பிஸி தான். இன்னொன்று சாப்பாடு… பரோட்டா, கறி தோசை, தண்ணி சட்னி பல வகையான அசைவ உணவுகள் என மதுரையின் உணவு பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இப்படியான மதுரை மாநகரத்தில் 20-க்கும் மேற்பட்ட கிளைகளோடு வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது ‘டெம்பிள் சிட்டி ஹோட்டல்’.

நெடுஞ்சாலைகளில் இந்த ஹோட்டலை விரிவுப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், ’டெம்பிள் சிட்டி ஹோட்டலின் நிர்வாக இயக்குநர் எஸ்.ஜே.அபிராம் விகாஸ் நம்மிடம் பேசினார். “மதுரையில் 2003-ம் ஆண்டு மாட்டுத்தாவணி பஸ் ஸ்டேண்டிற்கு எதிரில் நாங்கள் முதன் முதலில் ‘டெம்பிள் சிட்டி ஹோட்டலை திறந்தோம். ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய உணவுகள், நார்த் இந்தியன் மற்றும் சைனீஸ் உணவுகள் அனைத்தும் அப்போது மதுரையில் ஸ்டார் ஹோட்டல்களில் மட்டுமே இருந்தது. இதை மாற்றி சாதாரண மக்களும் அனைத்து உணவுகளையும் ருசிக்கும்படி மாற்றினோம். மதுரையில் இந்த மாதிரியான உணவுகளை ரெஸ்டாரெண்டில் முதன் முதலாக நாங்கள் தான் கொடுத்தோம். இது தான் எங்களுடைய பெஞ்ச் மார்க்!

எப்படி விரிவுப்படுத்தினீர்கள்?

பாரத் பெட்ரோலியத்துடன் இணைந்து மதுரை – திண்டுக்கல் மற்றும் மதுரை – திருச்சி சாலைகளில் உணவகம் திறந்தோம். அதன் பிறகு தான் மற்ற பிரபல உணவகங்களும் நெடுஞ்சாலைகளில் கவனம் செலுத்தத் தொடங்கின. மதுரையின் சிறப்பம்சமே சுற்றியுள்ள அனைத்தும் நான்கு வழிச்சாலைகளாக இருப்பது தான். ஆகையால் 6-7 நான்கு வழிச்சாலைகளில் நமது ’டெம்பிள் சிட்டி ஹோட்டல்’ செயல்பட்டு வருகிறது. விரைவில் 2 புதிய கிளைகளும் நெடுஞ்சாலை உணவகமாக ஆரம்பமாகவிருக்கிறது.

இந்த ஹை-வே ரெஸ்டாரெண்டுகளில் நிழல் தரும் கார் பார்க்கிங் உள்ளது. நிறைய பேர் வெயிலில் காரை நிறுத்த தயங்குவார்கள். எங்களிடம் அந்தப் பிரச்னை இல்லை. சுகாதாரமான பாத்ரூம் மற்றும் எங்களது அனைத்து நெடுஞ்சாலை உணவகங்களிலும் எலெக்ட்ரிக் கார் சார்ஜிங் வசதியும் உள்ளது.

நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவர்கள் களைப்பாறும் விதமாக டீ, காபி, ஜூஸ் போன்றவைகளோடு ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, இருட்டுக்கடை அல்வா போன்ற பாரம்பரிய இனிப்புகளோடு எங்களது சொந்த தயாரிப்பான வளர்மதி ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் கிடைக்கும். அம்மாவின் கை பக்குவத்தில் ’டெம்பிள் சிட்டி ஃபுட் புராடெக்ட்ஸ்’ என்ற பெயரில் பொடி வகைகள், ஊறுகாய், தொக்கு மற்றும் வத்தல் போன்றவைகளும் எங்களிடம் கிடைக்கும். இவற்றை எங்களின் உணவகங்களிலும், ஆன்லைனிலும் வாங்கிக் கொள்ளலாம்.

டிரெண்டிங்கில் டெம்பிள் சிட்டி

கோவிட் பெருந்தொற்று நேரத்தில் மாஸ்க் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ‘மாஸ்க் பரோட்டா’ தயார் செய்தோம். இது படு வைரலானது. அதோடு கொரோனா வைரஸ் போன்ற தோற்றத்தில் போண்டாவையும் அறிமுகப்படுத்தினோம். இப்படி டிரெண்டிங்கிற்கு ஏற்றவாறு எங்களை தயார் செய்துக் கொள்கிறோம்.

ரெஸ்டாரெண்டில் ஒரு ஷாப்பிங் 

இதுபோக இந்திய கை வேலைப்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில், ’பிளாசம்ஸ் (Blossoms) ஹேண்டிகிராஃப்ட்’ என்ற ஸ்டோரை நமது அனைத்து உணவகங்களிலும் வைத்துள்ளோம். தமிழகத்திற்கு வரும் பயணிகளுக்கு பயன்தரும் வகையில், மதுரை சம்பந்தமான விஷயங்களை கை வேலைப்பாடுகளாக இங்கே வைத்துள்ளோம். அதோடு வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் இந்திய வேலைப்பாடுகளை இந்த ஒரே கடையில் பார்க்கலாம். தேசிய விருது பெற்ற பல கைவினை கலைஞர்களின் பொருட்கள் நமது கடையில் இடம்பெற்றுள்ளன. மகளீர் சுய உதவிக்குழுக்களுக்கு உதவிடும் நோக்கில், அவர்களின் தயாரிப்புகளும் நம்மிடம் கிடைக்கும். தவிர, மாற்றுத்திறனாளிகள் செய்யும் பர்ஸ், பை போன்ற பொருட்களும் நமது ’பிளாசம்ஸ் (Blossoms) ஹேண்டிகிராஃப்ட்’ ஸ்டோரில் இடம்பெற்றுள்ளன.

உள்ளூர்க்காரர்களுக்கே முன்னுரிமை

நமது டெம்பிள் சிட்டி ஹோட்டலில் 20% வேலையாட்கள் தான் வட இந்தியர்கள். மற்றபடி அனைவரும் உள்ளூர்க்காரர்கள் தான். நமது கிளைகள் பொதுவாகவே நெடுஞ்சாலைகளில் இருப்பதால், அதை ஒட்டிய கிராமங்களில் இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குகிறோம். எந்த அனுபவமும் இல்லை என்றாலும் அவர்களுக்கு 3 மாதம் சம்பளத்துடன் கூடிய பயிற்சியை வழங்கி பின்னர் தான் பணியில் அமர்த்துகிறோம். அதிலும் 70-80 சதவீதம் பெண்கள் தான் வேலை செய்கிறார்கள்” எனக் கூறி முடித்தார்.


“மென்மேலும் வளர வாழ்த்துக்கள்”

Best Highway Restaurants in Tamil Nadu Hygienic Highway Hotels. Madurai Famous Foods Mask Parotta Madurai S.J. Abiram Vikas Interview
Share. Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link
Previous Articleதமிழகத்தின் பாரம்பரிய ‘உதயம்’ பிராண்டை கைப்பற்றியது ரிலையன்ஸ்: தேசிய அளவில் விரிவாக்கம் செய்ய திட்டம்!
Next Article ‘சங்கீதா’ உணவகம் தொடர்ந்த வழக்கு: ‘கீதம்’ உடன் சமரசமா? சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
Shalini Chandrasekar

    தொடர்புடைய பதிவுகள்

    சர்வதேச விமான நிலைய அந்தஸ்து மற்றும் மருத்துவ சுற்றுலாவால் புதிய உத்வேகம் பெறும் மதுரை ஹோட்டல் துறை

    April 11, 2026

    கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசுக்கு ஹோட்டல் சங்கங்கள் அவசர கடிதம்

    March 11, 2026

    சுற்றுலா பயணிகளை தஞ்சை நோக்கி படையெடுக்க வைத்த ‘பொன்னியின் செல்வன்’ – ’மெய்யழகன்’!

    February 12, 2026

    கர்நாடகாவில் தனது ஹோட்டல் சேவையை விரிவாக்கம் செய்யும் தி ஃபெர்ன்: பெலகாவியில் 2-வது கிளை தொடக்கம்

    February 11, 2026
    Leave A Reply Cancel Reply

    தேடுங்கள்
    Follow Us On Social Media
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    சமீபத்திய முக்கிய செய்திகள்
    Uncategorized
    5 Mins Read2 Views

    பாரதத்தின் பண்டைய தானியங்களும், மசாலாப் பொருட்களும், ஏன் உலகின் நாவை சுவைக்கின்றன?

    By Swaminathan BalasubramanianMay 15, 20260

    — ஆர். சங்கரன் கர்நாடகத்தின் கேழ்வரகு வயல்களிலிருந்து சிங்கப்பூரின் உயரிய கடைகள் வரை — பாரதத்தின் பண்டைய தானியங்களும் பாரம்பரிய…

    சர்வதேச விமான நிலைய அந்தஸ்து மற்றும் மருத்துவ சுற்றுலாவால் புதிய உத்வேகம் பெறும் மதுரை ஹோட்டல் துறை

    April 11, 2026

    கடலூரில் முதல் கிளையைத் தொடங்கியது ‘நானாஸ்’ இனிப்பகம்

    April 4, 2026

    பனிக்கூழ் உலகில் இரு தசாப்தங்கள் தொடும் ஒரு சகாப்தம்; ‘சாம்பியன் ‘ இனி டெல்டா முழுவதும்

    March 17, 2026
    வலைப்பதிவு வகைகள்
    • Uncategorized (6)
    • அடுமனை / பேக்கரி (4)
    • அயலக உணவகங்கள்  (1)
    • உணவகங்கள் (28)
    • உணவு உற்பத்தியாளர்கள் (8)
    • சங்கங்கள் (10)
    • விநியோகஸ்தர்கள் (4)
    வலைப்பதிவு காப்பகங்கள்
    • May 2026 (1)
    • April 2026 (2)
    • March 2026 (4)
    • February 2026 (20)
    • January 2026 (21)
    • December 2025 (3)
    • November 2025 (7)
    கிச்சன் ஹெரால்ட்
    கிச்சன் ஹெரால்ட்

    கிச்சன் ஹெரால்ட் என்பது இந்திய சமையல்காரர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், உணவு கையாளுபவர்கள் சமூகம் மற்றும் உலகளாவிய சமையல் சமூகத்திற்கான முன்னணி B2B டிஜிட்டல் ஊடகமாகும். நாங்கள் உலகளாவிய உணவுத் துறையைக் கண்காணித்து, எங்கள் வாசகர்களுக்கு சமீபத்திய செய்திகள், வேலை காலியிடங்கள் நேர்காணல்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்குகிறோம். முக்கியமாக ஹோட்டல் உரிமையாளர்கள், சமையல்காரர்கள், பேக்கரி உரிமையாளர்கள், உணவு உற்பத்தியாளர்கள், கொள்முதல் மேலாளர்கள், விநியோகஸ்தர்கள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் பலவற்றைச் சென்றடையும் நாங்கள், HoReCA பிரிவுக்கு மிகவும் விரும்பப்படும் உணவு போர்டல்.

    Facebook Instagram YouTube LinkedIn
    வலைப்பதிவு வகைகள்
    • Uncategorized (6)
    • அடுமனை / பேக்கரி (4)
    • அயலக உணவகங்கள்  (1)
    • உணவகங்கள் (28)
    • உணவு உற்பத்தியாளர்கள் (8)
    • சங்கங்கள் (10)
    • விநியோகஸ்தர்கள் (4)
    பயனுள்ள இணைப்புகள்
    • முகப்பு
    • எங்கள் எழுத்தாளர்கள்
    • எங்கள் நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
    • எங்களை தொடர்பு கொள்ள
    • தனியுரிமைக் கொள்கை
    பதிப்புரிமை © 2021-2026 - கிச்சன் ஹெரால்ட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
    உங்கள் நிறுவனத்திற்கான தொழில்முறை வலைத்தளத்தை DotBrix இலிருந்து பெறுங்கள்.

    Type above and press Enter to search. Press Esc to cancel.