Close Menu
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • முகப்பு
  • உணவகங்கள்
  • அடுமனை / பேக்கரி
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • சங்கங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • அயலக உணவகங்கள் 
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
  • எங்களை தொடர்பு கொள்ள
சூடான செய்திகள்

பனிக்கூழ் உலகில் இரு தசாப்தங்கள் தொடும் ஒரு சகாப்தம்; ‘சாம்பியன் ‘ இனி டெல்டா முழுவதும்

March 17, 2026

அடுமனைகளின் நலன் கருதி இயற்கை எரிவாயுவிற்கு முன்னுரிமை அளிக்க IBF கோரிக்கை

March 17, 2026

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசுக்கு ஹோட்டல் சங்கங்கள் அவசர கடிதம்

March 11, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook Instagram YouTube LinkedIn
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • முகப்பு
  • உணவகங்கள்
  • அடுமனை / பேக்கரி
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • சங்கங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • அயலக உணவகங்கள் 
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
  • எங்களை தொடர்பு கொள்ள
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • அடுமனை / பேக்கரி
  • அயலக உணவகங்கள் 
  • உணவகங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
Home»உணவகங்கள்»மதுரையில் ரூ.300 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு – அரசு வசமானது பாண்டியன் ஹோட்டல்!
உணவகங்கள்

மதுரையில் ரூ.300 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு – அரசு வசமானது பாண்டியன் ஹோட்டல்!

நிலம் மீட்கப்பட்ட அடுத்த நாளே அங்கேயே 'ஓட்டல் தமிழ்நாடு' (Unit-3) அலுவலகம் தொடங்கப்பட்டு, முன்பதிவுகளும் ஆரம்பமாகியுள்ளன
Swaminathan BalasubramanianBy Swaminathan BalasubramanianJanuary 20, 2026No Comments1 Min Read0 Views
Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link

ச.ஷாலினி

மதுரையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்த புகழ்பெற்ற ‘பாண்டியன் ஹோட்டல்’ (தற்போது பார்ச்சூன் பாண்டியன்) வசம் இருந்த 5.9 ஏக்கர் அரசு நிலத்தை தமிழக அரசு அதிரடியாக மீட்டெடுத்துள்ளது.

என்ன நடந்தது?

கடந்த 1968-ம் ஆண்டு, அரசுக்குச் சொந்தமான 5.9 ஏக்கர் நிலம் 25 ஆண்டு கால குத்தகைக்கு பாண்டியன் ஹோட்டல் நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது. இந்த குத்தகை காலம் 2008-லேயே முடிவடைந்த பின்னரும், ஹோட்டல் நிர்வாகம் நிலத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தது.

நீதிமன்ற வழக்கு

நிலத்தை நிரந்தரமாக ஒதுக்கீடு செய்ய, அரசு ரூ.36.58 கோடி கட்டணம் செலுத்துமாறு 2015-ல் உத்தரவிட்டது. ஆனால், அந்தத் தொகையைச் செலுத்த முடியாத ஹோட்டல் நிர்வாகம், நீதிமன்றத்தை நாடியது. பல ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கில், குத்தகை முடிந்த பிறகும் அரசு நிலத்தை வைத்திருந்தது தவறு என்றும், சுமார் ரூ.300 கோடிக்கும் அதிக மதிப்புள்ள இந்த நிலத்தை அரசு உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் 2023-ல் உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவின்படி, மதுரை மாவட்ட ஆட்சியர் நிலத்தை மீட்க ஆணை பிறப்பித்ததைத் தொடர்ந்து, தற்போது அந்த இடம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC-Tamil Nadu Tourism Development Corporation) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நிலம் மீட்கப்பட்ட அடுத்த நாளே அங்கேயே ‘ஓட்டல் தமிழ்நாடு’ (Unit-3) அலுவலகம் தொடங்கப்பட்டு, முன்பதிவுகளும் ஆரம்பமாகியுள்ளன.

ஏற்கனவே இக்கழகத்தின் கீழ் பெரியார் பஸ் ஸ்டாண்டில் ஓட்டல் தமிழ்நாடு யூனிட் 1, அழகர்கோவில் ரோட்டில் யூனிட் 2 ஓட்டல்கள் செயல்பட்டு வரும் நிலையில், மூன்றாவது யூனிட்டாக ஓட்டல் பார்ச்சூன் பாண்டியன் என்ற பெயரில் இது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Land Reclamation. Madurai News Pandian Hotel TTDC தமிழக அரசு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நில மீட்பு பாண்டியன் ஹோட்டல் மதுரை ஆட்சியர் மதுரை செய்திகள்
Share. Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link
Previous Articleகோவையில் பிப்ரவரி 9-ல் உணவு பதப்படுத்துதல் இலவச பயிற்சி!
Next Article கோவையில் புதிதாக 5 எப்.எல்.2 (FL2) பார்கள் திறப்பு
Swaminathan Balasubramanian

    தொடர்புடைய பதிவுகள்

    கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசுக்கு ஹோட்டல் சங்கங்கள் அவசர கடிதம்

    March 11, 2026

    சுற்றுலா பயணிகளை தஞ்சை நோக்கி படையெடுக்க வைத்த ‘பொன்னியின் செல்வன்’ – ’மெய்யழகன்’!

    February 12, 2026

    கர்நாடகாவில் தனது ஹோட்டல் சேவையை விரிவாக்கம் செய்யும் தி ஃபெர்ன்: பெலகாவியில் 2-வது கிளை தொடக்கம்

    February 11, 2026

    தமிழகத்தின் கருணை தொழிற்சாலை : சர்வதேச மையம் மூலம் உலகை ஆளும்  தெய்வீகச் சமையலறை

    February 10, 2026
    Leave A Reply Cancel Reply

    தேடுங்கள்
    Follow Us On Social Media
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    சமீபத்திய முக்கிய செய்திகள்
    உணவு உற்பத்தியாளர்கள்
    3 Mins Read131 Views

    பனிக்கூழ் உலகில் இரு தசாப்தங்கள் தொடும் ஒரு சகாப்தம்; ‘சாம்பியன் ‘ இனி டெல்டா முழுவதும்

    By Swaminathan BalasubramanianMarch 17, 20260

    சொக்கப்பன் சீ (cbedit@imaws.org) கலாச்சாரப் பெருமையும் வணிகச் செழிப்பும் கொண்ட கும்பகோணத்தில், உணவுக் கலை மரபுகள் மிக ஆழமாக வேரூன்றியுள்ளன.…

    அடுமனைகளின் நலன் கருதி இயற்கை எரிவாயுவிற்கு முன்னுரிமை அளிக்க IBF கோரிக்கை

    March 17, 2026

    கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசுக்கு ஹோட்டல் சங்கங்கள் அவசர கடிதம்

    March 11, 2026

    மயிலாடுதுறை மற்றும் நெய்வேலியில் தமிழ் பால் நிறுவனத்தின் புதிய விநியோக மையங்கள் திறப்பு

    March 5, 2026
    வலைப்பதிவு வகைகள்
    • Uncategorized (4)
    • அடுமனை / பேக்கரி (4)
    • அயலக உணவகங்கள்  (1)
    • உணவகங்கள் (27)
    • உணவு உற்பத்தியாளர்கள் (8)
    • சங்கங்கள் (9)
    • விநியோகஸ்தர்கள் (4)
    வலைப்பதிவு காப்பகங்கள்
    • March 2026 (4)
    • February 2026 (20)
    • January 2026 (21)
    • December 2025 (3)
    • November 2025 (7)
    கிச்சன் ஹெரால்ட்
    கிச்சன் ஹெரால்ட்

    கிச்சன் ஹெரால்ட் என்பது இந்திய சமையல்காரர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், உணவு கையாளுபவர்கள் சமூகம் மற்றும் உலகளாவிய சமையல் சமூகத்திற்கான முன்னணி B2B டிஜிட்டல் ஊடகமாகும். நாங்கள் உலகளாவிய உணவுத் துறையைக் கண்காணித்து, எங்கள் வாசகர்களுக்கு சமீபத்திய செய்திகள், வேலை காலியிடங்கள் நேர்காணல்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்குகிறோம். முக்கியமாக ஹோட்டல் உரிமையாளர்கள், சமையல்காரர்கள், பேக்கரி உரிமையாளர்கள், உணவு உற்பத்தியாளர்கள், கொள்முதல் மேலாளர்கள், விநியோகஸ்தர்கள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் பலவற்றைச் சென்றடையும் நாங்கள், HoReCA பிரிவுக்கு மிகவும் விரும்பப்படும் உணவு போர்டல்.

    Facebook Instagram YouTube LinkedIn
    வலைப்பதிவு வகைகள்
    • Uncategorized (4)
    • அடுமனை / பேக்கரி (4)
    • அயலக உணவகங்கள்  (1)
    • உணவகங்கள் (27)
    • உணவு உற்பத்தியாளர்கள் (8)
    • சங்கங்கள் (9)
    • விநியோகஸ்தர்கள் (4)
    பயனுள்ள இணைப்புகள்
    • முகப்பு
    • எங்கள் எழுத்தாளர்கள்
    • எங்கள் நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
    • எங்களை தொடர்பு கொள்ள
    • தனியுரிமைக் கொள்கை
    பதிப்புரிமை © 2021-2026 - கிச்சன் ஹெரால்ட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
    உங்கள் நிறுவனத்திற்கான தொழில்முறை வலைத்தளத்தை DotBrix இலிருந்து பெறுங்கள்.

    Type above and press Enter to search. Press Esc to cancel.