Close Menu
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • முகப்பு
  • உணவகங்கள்
  • அடுமனை / பேக்கரி
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • சங்கங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • அயலக உணவகங்கள் 
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
  • எங்களை தொடர்பு கொள்ள
சூடான செய்திகள்

கடலூரில் முதல் கிளையைத் தொடங்கியது ‘நானாஸ்’ இனிப்பகம்

April 4, 2026

பனிக்கூழ் உலகில் இரு தசாப்தங்கள் தொடும் ஒரு சகாப்தம்; ‘சாம்பியன் ‘ இனி டெல்டா முழுவதும்

March 17, 2026

அடுமனைகளின் நலன் கருதி இயற்கை எரிவாயுவிற்கு முன்னுரிமை அளிக்க IBF கோரிக்கை

March 17, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook Instagram YouTube LinkedIn
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • முகப்பு
  • உணவகங்கள்
  • அடுமனை / பேக்கரி
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • சங்கங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • அயலக உணவகங்கள் 
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
  • எங்களை தொடர்பு கொள்ள
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • அடுமனை / பேக்கரி
  • அயலக உணவகங்கள் 
  • உணவகங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
Home»உணவகங்கள்»கோவையில் புதிதாக 5 எப்.எல்.2 (FL2) பார்கள் திறப்பு
உணவகங்கள்

கோவையில் புதிதாக 5 எப்.எல்.2 (FL2) பார்கள் திறப்பு

இதனால் அருகிலுள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை சரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Swaminathan BalasubramanianBy Swaminathan BalasubramanianJanuary 20, 2026No Comments2 Mins Read2 Views
Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link

ச.ஷாலினி

கோவை மாவட்டத்தில் மேலும் 5 தனியார் கிளப்களுக்கு எப்.எல்.2 (FL2) உரிமத்துடன் கூடிய மதுபான பார்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள மொத்த FL2 பார்களின் எண்ணிக்கை 78-ஆக உயர்ந்துள்ளது. தேர்தல் வருவதற்கு முன்பாக மேலும் 10 பார்களுக்கு அனுமதி வழங்க, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

புதிய பார்கள் எங்கு திறக்கப்பட்டுள்ளன?

புலியகுளம், குரும்பபாளையம், கண்ணப்ப நகர், அன்னூர் (ஓதிமலை சாலை) மற்றும் மயிலம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு அருகிலேயே இந்தப் புதிய பார்கள் திறக்கப்பட்டுள்ளன.

வாக்குறுதிக்கு மாறாகச் செயல்படுகிறதா அரசு?

திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடுவதாகக் கூறியிருந்தது. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 1,200-க்கும் மேற்பட்ட FL2 பார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவையில் மட்டும் தற்போது 288 டாஸ்மாக் கடைகளும், 78 தனியார் பார்களும் செயல்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

இந்த மதுபான பார்களுக்குப் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கண்ணப்ப நகர் பகுதியில் ஏற்கனவே ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் 4 டாஸ்மாக் கடைகள் இருக்கும்போது, புதிய பார் அமைக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் மனு அளித்துள்ளனர்.

புலியகுளம் விநாயகர் கோவில் அருகே 500 மீட்டர் தொலைவில் ஏற்கனவே 3 கடைகள் உள்ள நிலையில், புதிய பார் திறக்கப்பட்டது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விதிமீறல் புகார்கள்

எப்.எல்.2 உரிமம் என்பது ஒரு கிளப்பில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே மது வழங்க வழங்கப்படுவதாகும். ஆனால், இந்த விதியை மீறி உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கும் பாட்டில் கணக்கில் மது விற்பனை செய்யப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. 180 மி.லி பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 20 முதல் 30 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவதாகவும், டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

டாஸ்மாக் விற்பனை சரிவு

தனியார் பார்களில் தண்ணீர், கிளாஸ் மற்றும் சிற்றுண்டிகள் கிடைப்பதால், குடிமகன்கள் டாஸ்மாக் கடைகளை விட இந்த பார்களையே விரும்புகின்றனர். இதனால் அருகிலுள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை சரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிகாரிகளின் விளக்கம்

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் கூறுகையில், “பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது அறிக்கை தாக்கல் செய்ய ஆயத்தீர்வைத் துறை துணை ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார். மதுவிலக்குத் துறை அமைச்சர் சு. முத்துசாமி இதுகுறித்துப் பேசும்போது, “FL2 லைசென்ஸ் குறித்த கோப்புகள் எங்களிடம் வருவதில்லை, இருப்பினும் இது குறித்து ஆய்வு செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

Coimbatore News FL2 Bar Licence Public Protest. Tasmac அமைச்சர் முத்துசாமி எப்.எல்.2 உரிமம் கோவை செய்திகள் கோவை மாவட்ட ஆட்சியர் டாஸ்மாக் பொதுமக்கள் எதிர்ப்பு மதுபான பார்கள்
Share. Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link
Previous Articleமதுரையில் ரூ.300 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு – அரசு வசமானது பாண்டியன் ஹோட்டல்!
Next Article இந்திய சிறு நகரங்கள் வளர்ச்சியில் கைகொடுப்பதாக ஆய்வு தகவல்
Swaminathan Balasubramanian

    தொடர்புடைய பதிவுகள்

    கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசுக்கு ஹோட்டல் சங்கங்கள் அவசர கடிதம்

    March 11, 2026

    சுற்றுலா பயணிகளை தஞ்சை நோக்கி படையெடுக்க வைத்த ‘பொன்னியின் செல்வன்’ – ’மெய்யழகன்’!

    February 12, 2026

    கர்நாடகாவில் தனது ஹோட்டல் சேவையை விரிவாக்கம் செய்யும் தி ஃபெர்ன்: பெலகாவியில் 2-வது கிளை தொடக்கம்

    February 11, 2026

    தமிழகத்தின் கருணை தொழிற்சாலை : சர்வதேச மையம் மூலம் உலகை ஆளும்  தெய்வீகச் சமையலறை

    February 10, 2026
    Leave A Reply Cancel Reply

    தேடுங்கள்
    Follow Us On Social Media
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    சமீபத்திய முக்கிய செய்திகள்
    Uncategorized
    2 Mins Read114 Views

    கடலூரில் முதல் கிளையைத் தொடங்கியது ‘நானாஸ்’ இனிப்பகம்

    By Swaminathan BalasubramanianApril 4, 20260

    -KH செய்திப் பிரிவு (editorial1@imaws.org) கடலூர் – தமிழகத்தின் பாரம்பரிய இனிப்பு மற்றும் பேக்கரி துறையில் ஒரு புதிய மைல்கல்லாக,…

    பனிக்கூழ் உலகில் இரு தசாப்தங்கள் தொடும் ஒரு சகாப்தம்; ‘சாம்பியன் ‘ இனி டெல்டா முழுவதும்

    March 17, 2026

    அடுமனைகளின் நலன் கருதி இயற்கை எரிவாயுவிற்கு முன்னுரிமை அளிக்க IBF கோரிக்கை

    March 17, 2026

    கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசுக்கு ஹோட்டல் சங்கங்கள் அவசர கடிதம்

    March 11, 2026
    வலைப்பதிவு வகைகள்
    • Uncategorized (5)
    • அடுமனை / பேக்கரி (4)
    • அயலக உணவகங்கள்  (1)
    • உணவகங்கள் (27)
    • உணவு உற்பத்தியாளர்கள் (8)
    • சங்கங்கள் (9)
    • விநியோகஸ்தர்கள் (4)
    வலைப்பதிவு காப்பகங்கள்
    • April 2026 (1)
    • March 2026 (4)
    • February 2026 (20)
    • January 2026 (21)
    • December 2025 (3)
    • November 2025 (7)
    கிச்சன் ஹெரால்ட்
    கிச்சன் ஹெரால்ட்

    கிச்சன் ஹெரால்ட் என்பது இந்திய சமையல்காரர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், உணவு கையாளுபவர்கள் சமூகம் மற்றும் உலகளாவிய சமையல் சமூகத்திற்கான முன்னணி B2B டிஜிட்டல் ஊடகமாகும். நாங்கள் உலகளாவிய உணவுத் துறையைக் கண்காணித்து, எங்கள் வாசகர்களுக்கு சமீபத்திய செய்திகள், வேலை காலியிடங்கள் நேர்காணல்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்குகிறோம். முக்கியமாக ஹோட்டல் உரிமையாளர்கள், சமையல்காரர்கள், பேக்கரி உரிமையாளர்கள், உணவு உற்பத்தியாளர்கள், கொள்முதல் மேலாளர்கள், விநியோகஸ்தர்கள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் பலவற்றைச் சென்றடையும் நாங்கள், HoReCA பிரிவுக்கு மிகவும் விரும்பப்படும் உணவு போர்டல்.

    Facebook Instagram YouTube LinkedIn
    வலைப்பதிவு வகைகள்
    • Uncategorized (5)
    • அடுமனை / பேக்கரி (4)
    • அயலக உணவகங்கள்  (1)
    • உணவகங்கள் (27)
    • உணவு உற்பத்தியாளர்கள் (8)
    • சங்கங்கள் (9)
    • விநியோகஸ்தர்கள் (4)
    பயனுள்ள இணைப்புகள்
    • முகப்பு
    • எங்கள் எழுத்தாளர்கள்
    • எங்கள் நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
    • எங்களை தொடர்பு கொள்ள
    • தனியுரிமைக் கொள்கை
    பதிப்புரிமை © 2021-2026 - கிச்சன் ஹெரால்ட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
    உங்கள் நிறுவனத்திற்கான தொழில்முறை வலைத்தளத்தை DotBrix இலிருந்து பெறுங்கள்.

    Type above and press Enter to search. Press Esc to cancel.