Close Menu
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • முகப்பு
  • உணவகங்கள்
  • அடுமனை / பேக்கரி
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • சங்கங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • அயலக உணவகங்கள் 
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
  • எங்களை தொடர்பு கொள்ள
சூடான செய்திகள்

கடலூரில் முதல் கிளையைத் தொடங்கியது ‘நானாஸ்’ இனிப்பகம்

April 4, 2026

பனிக்கூழ் உலகில் இரு தசாப்தங்கள் தொடும் ஒரு சகாப்தம்; ‘சாம்பியன் ‘ இனி டெல்டா முழுவதும்

March 17, 2026

அடுமனைகளின் நலன் கருதி இயற்கை எரிவாயுவிற்கு முன்னுரிமை அளிக்க IBF கோரிக்கை

March 17, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook Instagram YouTube LinkedIn
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • முகப்பு
  • உணவகங்கள்
  • அடுமனை / பேக்கரி
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • சங்கங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • அயலக உணவகங்கள் 
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
  • எங்களை தொடர்பு கொள்ள
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • அடுமனை / பேக்கரி
  • அயலக உணவகங்கள் 
  • உணவகங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
Home»உணவகங்கள்»சுற்றுலா பயணிகளை தஞ்சை நோக்கி படையெடுக்க வைத்த ‘பொன்னியின் செல்வன்’ – ’மெய்யழகன்’!
உணவகங்கள்

சுற்றுலா பயணிகளை தஞ்சை நோக்கி படையெடுக்க வைத்த ‘பொன்னியின் செல்வன்’ – ’மெய்யழகன்’!

தஞ்சாவூர் சுற்றுலா: சினிமா தந்த வரவேற்பும், ஹோட்டல் தொழிலின் எதார்த்த நிலையும்!
Shalini ChandrasekarBy Shalini ChandrasekarFebruary 12, 2026No Comments2 Mins Read29 Views
Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link
Thanjavur tourism after Ponniyin Selvan movie
Share
Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link

– ஷாலினி சந்திரசேகர்

வெள்ளித்திரையில் தஞ்சையின் பிரம்மாண்டத்தைப் பார்த்துவிட்டு, ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தஞ்சாவூரை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக பொன்னியின் செல்வனும், மெய்யழகனும் தஞ்சையை நோக்கிச் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளன. இந்தப் பயணிகள் கூட்டம் ஹோட்டல் உரிமையாளர்களின் கல்லாப் பெட்டியை நிரப்புகிறதா என்ற எண்ணம் எழவே, இது குறித்து அறிய, தஞ்சையிலுள்ள சில உணவகத்தினரை தொடர்பு கொண்டோம். ’

‘ராம் ஆரியாஸ்’ ஹோட்டல் நிர்வாக இயக்குநர் ஸ்ரீராம் பேசுகையில், “பொன்னியின் செல்வன் படத்துக்குப் பிறகு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது உண்மை தான். உணவகம் மட்டும் வைத்திருந்தால் இது குறித்த வித்தியாசம் தெரியாமல் போயிருக்கும். ஆனால் நாங்கள் ‘ஹோம் ஸ்டே’வும் வைத்திருப்பதால் இந்த மாற்றத்தை என்னால் உணர முடிகிறது. பெரிய கோயில் பக்கத்திலேயே இருப்பதால் கூட்டத்தை கண்கூடாக பார்க்கிறோம். சென்னை, பெங்களூர், கோவா போன்ற நகரங்களில் தான் முன்பு வார இறுதி கூட்டம் இருந்தது. தஞ்சையை பொறுத்தவரை எப்போதும் யாத்திரையாக வருவோர்கள் தான் அதிகம். அதுவும் அவர்கள் வாரம் முழுவதுமே வந்து போய்க்கொண்டு தான் இருப்பார்கள்.

Thanjavur tourism after Ponniyin Selvan movie
ஸ்ரீராம்

ஆனால் பொன்னியின் செல்வன் படத்துக்குப் பிறகு வார இறுதி நாட்களில் கூட்டத்தைப் பார்க்க முடிகிறது. கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு வெளிநாட்டவரின் வருகை அதிகமாக இருந்தது. அது தற்போது பெருமளவில் குறைந்துவிட்டது. ஆனால் வெளி மாநிலத்தவர் மற்றும் வெளியூர் மக்களின் வருகை அதிகரித்துள்ளது. இந்த போக்கு இன்னும் நீண்ட நாள் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்” என்றார். ’இந்த மாதிரியான வித்தியாசத்தை இதற்கு முன்பு கண்டிருக்கிறீர்களா?’ என்ற நம் கேள்விக்கு, “தஞ்சை பெரிய கோயில் 1000-வது ஆண்டை கொண்டாடிய போது, இதே மாதிரியான சுற்றுலா பயணிகளை அதிகம் காண முடிந்தது” என்றார்.

‘ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் & ஹோட்டல்’ நிர்வாக இயக்குநர் ஜெயந்த், “தஞ்சைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெரிதளவில் அதிகரிக்கவில்லை. சீசன் காலங்களில் கோயிலைப் பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள்ன் வருகிறார்கள். மற்றபடி, வார இறுதி நாட்களில் உள்ளூர் மக்கள் தான் வருகிறார்களே தவிர, பெரியளவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை” என்றார்.

தஞ்சாவூர் மாவட்ட ஹோட்டல் அசோசியேசன் பொருளாளர் திரு.ரமேஷ் வாசவி (வாசவி ஹோட்டல்) அவர்களை தொடர்பு கொண்டபோது, ”சுற்றுலா பயணிகள் அதிகரித்தாலும், உணவகத்துறையைப் பொறுத்தவரை சொல்லிக் கொள்ளும்படியான தொழில் முன்னேற்றம் இல்லை. வரும்போதே பயணிகள் அவர்களுக்குத் தேவையான உணவையும் சமைத்து எடுத்து வருகிறார்கள். அதே போல் கூட்டம் அதிகரித்தாலும், நாளுக்கு நாள் உணவகங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளதால், நிலையான வணிகத்தைப் பெறுவதும் பெரும் சவால் தான். உணவுத்துறையில் அனுபவம் இல்லாதவர்கள் கூட, உணவகம் ஆரம்பிக்க முன்வருகிறார்கள், இதனால் நாளுக்கு நாள் போட்டி அதிகமாகிறது. தஞ்சையை பொறுத்தவரை வார இறுதி நாட்களிலும், அரசு விடுமுறை நாட்களிலும் வணிகம் நன்றாக இருக்கிறது” என்றார்.

Thanjavur Hotel Association News தஞ்சாவூர் சுற்றுலா (Thanjavur Tourism) தஞ்சை ஹோட்டல் தொழில் பொன்னியின் செல்வன் திரைத் தாக்கம் மெய்யழகன் திரைப்படம் தஞ்சை
Share. Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link
Previous Articleசொமேட்டோ, ஸ்விகிக்கு செக் – உணவு விநியோகத்தில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!
Next Article இந்திய பேக்கரி துறையின் மனிதவள நெருக்கடி: கல்விக்கும் தொழில்துறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பது எப்படி?
Shalini Chandrasekar

    தொடர்புடைய பதிவுகள்

    கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசுக்கு ஹோட்டல் சங்கங்கள் அவசர கடிதம்

    March 11, 2026

    கர்நாடகாவில் தனது ஹோட்டல் சேவையை விரிவாக்கம் செய்யும் தி ஃபெர்ன்: பெலகாவியில் 2-வது கிளை தொடக்கம்

    February 11, 2026

    தமிழகத்தின் கருணை தொழிற்சாலை : சர்வதேச மையம் மூலம் உலகை ஆளும்  தெய்வீகச் சமையலறை

    February 10, 2026

    கேரளாவின் தேக்கடியில் புதிய ஹோட்டல்: தி ஃபெர்ன் ரெசிடென்சி அறிமுகம்

    February 6, 2026
    Leave A Reply Cancel Reply

    தேடுங்கள்
    Follow Us On Social Media
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    சமீபத்திய முக்கிய செய்திகள்
    Uncategorized
    2 Mins Read114 Views

    கடலூரில் முதல் கிளையைத் தொடங்கியது ‘நானாஸ்’ இனிப்பகம்

    By Swaminathan BalasubramanianApril 4, 20260

    -KH செய்திப் பிரிவு (editorial1@imaws.org) கடலூர் – தமிழகத்தின் பாரம்பரிய இனிப்பு மற்றும் பேக்கரி துறையில் ஒரு புதிய மைல்கல்லாக,…

    பனிக்கூழ் உலகில் இரு தசாப்தங்கள் தொடும் ஒரு சகாப்தம்; ‘சாம்பியன் ‘ இனி டெல்டா முழுவதும்

    March 17, 2026

    அடுமனைகளின் நலன் கருதி இயற்கை எரிவாயுவிற்கு முன்னுரிமை அளிக்க IBF கோரிக்கை

    March 17, 2026

    கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசுக்கு ஹோட்டல் சங்கங்கள் அவசர கடிதம்

    March 11, 2026
    வலைப்பதிவு வகைகள்
    • Uncategorized (5)
    • அடுமனை / பேக்கரி (4)
    • அயலக உணவகங்கள்  (1)
    • உணவகங்கள் (27)
    • உணவு உற்பத்தியாளர்கள் (8)
    • சங்கங்கள் (9)
    • விநியோகஸ்தர்கள் (4)
    வலைப்பதிவு காப்பகங்கள்
    • April 2026 (1)
    • March 2026 (4)
    • February 2026 (20)
    • January 2026 (21)
    • December 2025 (3)
    • November 2025 (7)
    கிச்சன் ஹெரால்ட்
    கிச்சன் ஹெரால்ட்

    கிச்சன் ஹெரால்ட் என்பது இந்திய சமையல்காரர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், உணவு கையாளுபவர்கள் சமூகம் மற்றும் உலகளாவிய சமையல் சமூகத்திற்கான முன்னணி B2B டிஜிட்டல் ஊடகமாகும். நாங்கள் உலகளாவிய உணவுத் துறையைக் கண்காணித்து, எங்கள் வாசகர்களுக்கு சமீபத்திய செய்திகள், வேலை காலியிடங்கள் நேர்காணல்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்குகிறோம். முக்கியமாக ஹோட்டல் உரிமையாளர்கள், சமையல்காரர்கள், பேக்கரி உரிமையாளர்கள், உணவு உற்பத்தியாளர்கள், கொள்முதல் மேலாளர்கள், விநியோகஸ்தர்கள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் பலவற்றைச் சென்றடையும் நாங்கள், HoReCA பிரிவுக்கு மிகவும் விரும்பப்படும் உணவு போர்டல்.

    Facebook Instagram YouTube LinkedIn
    வலைப்பதிவு வகைகள்
    • Uncategorized (5)
    • அடுமனை / பேக்கரி (4)
    • அயலக உணவகங்கள்  (1)
    • உணவகங்கள் (27)
    • உணவு உற்பத்தியாளர்கள் (8)
    • சங்கங்கள் (9)
    • விநியோகஸ்தர்கள் (4)
    பயனுள்ள இணைப்புகள்
    • முகப்பு
    • எங்கள் எழுத்தாளர்கள்
    • எங்கள் நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
    • எங்களை தொடர்பு கொள்ள
    • தனியுரிமைக் கொள்கை
    பதிப்புரிமை © 2021-2026 - கிச்சன் ஹெரால்ட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
    உங்கள் நிறுவனத்திற்கான தொழில்முறை வலைத்தளத்தை DotBrix இலிருந்து பெறுங்கள்.

    Type above and press Enter to search. Press Esc to cancel.