இந்த நேர்காணலின் விளம்பரதாரர்

திருநெல்வேலியின் ‘காப்பர் லீஃப் ஹோட்டல்’ அடுத்ததாக மதுரை மற்றும் தூத்துக்குடியில் கிளைகளை தொடங்க திட்டமிட்டுள்ளது. 42 அறைகள், சைவம் மற்றும் அசைவத்துக்கு என தனித்தனியே 2 ரெஸ்டாரெண்டுகள், காஃபி ஷாப், 3 விருந்து மண்டபம் (Banquet hall) என வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அமைந்திருக்கும் அந்த ஹோட்டலின் நிர்வாக இயக்குநர் திரு.ஸ்ரீ தர்ஷன் அவர்களிடம் பேசினோம்…
சீசன் இல்லாத (Off season) காலங்களில் என்ன செய்வீர்கள்?
அந்த நேரங்களில் நாங்கள் எங்களை சீர்படுத்திக்கொள்வோம். ஹோட்டலில் வேலை செய்பவர்களை அடுத்த சீசனுக்கு ஏற்றவாறு தயார் செய்வோம். நிலுவையில் இருக்கும் மற்ற பணிகளை முடிப்போம். வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் ஆஃபர் மற்றும் விழாக்களை முன்னெடுப்போம்.
கார்ப்பரேட் விழா – குடும்ப விழா… இவற்றில் எது உங்களுக்கு லாபம்?
குறிப்பிட்டு சொல்ல முடியாது. குடும்ப விழாக்கள் நன்றாக இருக்கும். ஆனால் கார்ப்பரேட் விழாக்கள் தொடர்ச்சியாக இருக்கும். 365 நாட்களும் கார்ப்பரேட் தொழில் நடக்கும். குடும்ப விழாக்கள் சீசன்களில் நடைபெறும். அதனால் அது இது என்ற முடிவுக்கு வர முடியாது.

கூட்டத்தை எவ்வாறு கையாளுவீர்கள்?
Banquet hall பொறுத்தவரை வருவோரின் எண்ணிக்கையை முன் கூட்டியே விருந்தினர்களிடம் கேட்போம். அதுபோக வந்தால் அதிகபட்சமாக எவ்வளவு பேர் வருவார்கள் என்பதையும் கேட்டுக் கொள்வோம். அதை பொறுத்து எங்கள் குழுவினரை தயார் படுத்துவோம். ரெஸ்டாரெண்டை பொறுத்தவரை கூட்டம் அதிகமானால் காத்திருப்பு பகுதி, பார்க்கிங் வசதி என விருந்தினருக்கு எந்த சிரமமும் இல்லை.
இன்றைய ட்ரெண்டை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?
எங்களிடம் இன்றைய தலைமுறை விரும்பும்படியான அனைத்து வகை உணவுகளும் கிடைக்கும். தென்னிந்திய உணவு, வட இந்திய உணவு, தந்தூரி இவற்றோடு திருநெல்வேலியில் இலங்கை உணவுகள் எங்களிடம் தான் கிடைக்கிறது. இட்லி, தோசை போன்ற டிபன் ஐட்டங்களில் சாம்பார், 3 வகை சட்னி, 2 வகை பொடிகளுடன் பூண்டு தொக்கு தருகிறோம். இது மற்ற ரெஸ்டாரெண்டுகளில் கிடைக்காது. வட இந்திய உணவுகளில் 3 வகை கிரேவி, பான் – ஏசியன் மெனுவில் திம்சம் (பாரம்பரிய சைனீஸ் உணவு) தருகிறோம். இது தென் தமிழக உணவகங்கள் எதிலுமே கிடைக்காது. அசைவத்தைப் பொறுத்தவரை இலங்கை சீஸ் கொத்து, இடியாப்பம் கொத்து, லேம்ப் ரைஸ், ஓடுடன் கூடிய நண்டை சாப்பிடக் கூடிய ஒரு வகை உணவு என எங்களது மெனுவில் இடம்பெற்றுள்ள உணவுகள் அனைத்தும் சுவாரஸ்யமானவை. தவிர, எங்களுடைய உட்புற வேலைபாடுகள் அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் அமைந்திருக்கும்.

கடைசி நேர மாற்றங்களை எப்படி சமாளிப்பீர்கள்?
விழாக்கள் என்றாலே எப்போது கடைசி நிமிட மாற்றங்களுக்கு பஞ்சமிருக்காது. சில நேரங்களில் சொன்னதை விட அதிக ஆட்கள் வருவார்கள், மெனுவில் புதிதாக சிலவற்றை சேர்ப்பார்கள், அதனால் இவற்றை எதிர்கொள்ள எங்கள் வாட்ஸ்-ஆப் குரூப்பில் உடனடியாக அனைவருக்கும் தகவல் தெரிவிப்போம். என்ன மாற்றம் நிகழ்ந்தாலும் அதை சமாளிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
ஒரு திருமணத்தை மண்டபத்தில் நடத்தாமல் உங்கள் ஹோட்டலை புக் செய்ய ஏதேனும் ட்ரிக்ஸ் இருக்கிறதா?
விருந்தினர்கள் எல்லாம் இப்போது பயங்கர அறிவாளிகள். எல்லாவற்றையும் கணக்குப் போட்டு தான் செய்கிறார்கள். மண்டபம் என்றால் அதற்கான வாடகை, உணவுக்கு தனி செலவு, கரண்ட் பில், சுத்தம் செய்வதற்கான கட்டணம் என ஏகப்பட்ட கட்டணங்களை அவர்கள் கட்ட வேண்டி வரும். இதுவே அவர்கள் ஒரு ஹோட்டலில் திருமணத்தை நடத்தும்போது, உணவை தவிர வேறு எதற்கும் அவர்கள் செலவு செய்ய தேவை இல்லை. அதிலேயே நாங்கள் எல்லாத்தையும் சேர்த்து விடுவோம். இதை கணக்கிட்டுப் பார்த்துவிட்டு தான் பலர் ஹோட்டல்களிலேயே திருமணங்களை நடத்துகின்றனர்.
காப்பர் லீஃபின் விரிவாக்கத் திட்டம் என்ன?
எதிர்காலத்தில் திருநெல்வேலிக்கு அடுத்தபடியாக தூத்துக்குடியிலும், மதுரையிலும் எங்களது கிளைகளை விரிவடையச் செய்யும் திட்டமிருக்கிறது.


