Author: Swaminathan Balasubramanian
மயிலாடுதுறை மற்றும் நெய்வேலியில் தமிழ் பால் நிறுவனத்தின் புதிய விநியோக மையங்கள் திறப்பு
-KH News Desk தமிழகத்தின் முன்னணி பால் நிறுவனமான தமிழ் பால் (Tamil Milk) நிறுவனம், தனது வணிகத்தை விரிவுபடுத்தும் நோக்கில் மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் புதிய விநியோக மையங்களை இந்த வாரம் திறந்து வைத்துள்ளது. மயிலாடுதுறையில் புதிய கிளை மயிலாடுதுறை, சம்பந்தக்குளம் பகுதியில் 03.03.2026 செவ்வாய்க்கிழமை அன்று தமிழ் பால் நிறுவனத்தின் விநியோக மையம் புதிய பொலிவுடன், புதிய இடத்தில் திறக்கப்பட்டது. இந்த மையத்தை தமிழ் பால் நிறுவனத்தின் செயல் இயக்குனர் திரு. K. தியாகராஜன் அவர்கள் திறந்து வைத்தார். மயிலாடுதுறை மேற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் திரு. மூவலூர் M. மூர்த்தி, மயிலாடுதுறை சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் திரு. முகம்மது ரியாஜ் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் Lion. Dr. K. செல்வம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தனர். தமிழ்நாடு வணிகச் சங்கங்களின் பேரமைப்பு – மயிலாடுதுறை மாவட்டத் தலைவரும், ATS குழும நிறுவனங்களின்…
இந்திய பேக்கரி துறையின் மனிதவள நெருக்கடி: கல்விக்கும் தொழில்துறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பது எப்படி?
– கௌரவ் திங்க்ரா & சௌமியா சகாதேவன் இந்தியா தனது பொருளாதாரம் மற்றும் பணியாளர் மேம்பாட்டில் ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கிறது. 2047-ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த பொருளாதாரமாக மாற வேண்டும் என்ற இலக்கை நோக்கி நாடு முன்னேறி வரும் வேளையில், அதன் இளைய மற்றும் விரிவடைந்து வரும் பணியாளர் பட்டாளம் இந்த லட்சியத்தின் மையத்தூணாக உள்ளது. காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பின்படி (ஜனவரி 2026), இந்தியாவின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 55.9% ஆகவும், தொழிலாளர் மக்கள் தொகை விகிதம் 56.2% ஆகவும், வேலையின்மை விகிதம் 5% ஆகவும் உள்ளது. இந்தக் குறிகாட்டிகள் நிலையான பணியாளர் ஈடுபாட்டை உணர்த்தினாலும், ஒரு ஆழமான சவால் உள்ளது: அதுதான் தொழில்துறையின் தேவைக்கும் பணியாளர்களின் திறனுக்கும் இடையே அதிகரித்து வரும் இடைவெளி. வளர்ந்து வரும் வேலைவாய்ப்பு மிகுந்த துறைகளில், இந்தியாவின் உணவு பதப்படுத்தும் சூழலில் பேக்கரி தொழில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 2024-இல் 13.8 பில்லியன் அமெரிக்க டாலர்…
இந்திய சிறு நகரங்கள் வளர்ச்சியில் கைகொடுப்பதாக ஆய்வு தகவல்
ச.ஷாலினி Booking.com மற்றும் Statista இணைந்து நடத்திய ‘இந்தியா அக்கமடேஷன் பாரோமீட்டர்’ (India Accommodation Barometer) ஆய்வின்படி, 75% ஹோட்டல் உரிமையாளர்களுக்கு வரும் மாதங்களில் தொழில் வளர்ச்சி சூப்பராக இருக்கும் என்று கணித்துள்ளனர். இது கடந்த 2024-ம் ஆண்டின் 69% என்ற அளவை விட அதிகமாகும். டயர்-III (Tier-III) நகரங்களின் ஆதிக்கம் இந்தியாவின் சிறிய நகரங்களான டயர்-3 நகரங்களில் ஹோட்டல் அறைகளுக்கான தேவை, தங்கும் வீதம் (Occupancy Rates) மற்றும் சராசரி தினசரி வருவாய் (ADR) ஆகியவை மிகச் சிறப்பாக உள்ளன. “இந்திய தங்குமிடத் துறை சவால்களை முன்கூட்டியே கணித்து புதுமைகளைப் புகுத்தி வருகிறது” என்று Booking.com தெற்காசிய பிராந்திய மேலாளர் சந்தோஷ் குமார் தெரிவித்துள்ளார். நிகழ்வு-சார் பயணங்கள் (Event-Driven Travel) திருவிழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் ஹோட்டல் புக்கிங்குகளை அதிகரிக்கின்றன. 56% ஹோட்டல் உரிமையாளர்கள் இது போன்ற நிகழ்வுகளால் புக்கிங் அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளனர். 41% பேர் ஒரு…
ச.ஷாலினி கோவை மாவட்டத்தில் மேலும் 5 தனியார் கிளப்களுக்கு எப்.எல்.2 (FL2) உரிமத்துடன் கூடிய மதுபான பார்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள மொத்த FL2 பார்களின் எண்ணிக்கை 78-ஆக உயர்ந்துள்ளது. தேர்தல் வருவதற்கு முன்பாக மேலும் 10 பார்களுக்கு அனுமதி வழங்க, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. புதிய பார்கள் எங்கு திறக்கப்பட்டுள்ளன? புலியகுளம், குரும்பபாளையம், கண்ணப்ப நகர், அன்னூர் (ஓதிமலை சாலை) மற்றும் மயிலம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு அருகிலேயே இந்தப் புதிய பார்கள் திறக்கப்பட்டுள்ளன. வாக்குறுதிக்கு மாறாகச் செயல்படுகிறதா அரசு? திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடுவதாகக் கூறியிருந்தது. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 1,200-க்கும் மேற்பட்ட FL2 பார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவையில் மட்டும் தற்போது 288 டாஸ்மாக் கடைகளும், 78 தனியார் பார்களும் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் கடும்…
ச.ஷாலினி மதுரையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்த புகழ்பெற்ற ‘பாண்டியன் ஹோட்டல்’ (தற்போது பார்ச்சூன் பாண்டியன்) வசம் இருந்த 5.9 ஏக்கர் அரசு நிலத்தை தமிழக அரசு அதிரடியாக மீட்டெடுத்துள்ளது. என்ன நடந்தது? கடந்த 1968-ம் ஆண்டு, அரசுக்குச் சொந்தமான 5.9 ஏக்கர் நிலம் 25 ஆண்டு கால குத்தகைக்கு பாண்டியன் ஹோட்டல் நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது. இந்த குத்தகை காலம் 2008-லேயே முடிவடைந்த பின்னரும், ஹோட்டல் நிர்வாகம் நிலத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தது. நீதிமன்ற வழக்கு நிலத்தை நிரந்தரமாக ஒதுக்கீடு செய்ய, அரசு ரூ.36.58 கோடி கட்டணம் செலுத்துமாறு 2015-ல் உத்தரவிட்டது. ஆனால், அந்தத் தொகையைச் செலுத்த முடியாத ஹோட்டல் நிர்வாகம், நீதிமன்றத்தை நாடியது. பல ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கில், குத்தகை முடிந்த பிறகும் அரசு நிலத்தை வைத்திருந்தது தவறு என்றும், சுமார் ரூ.300 கோடிக்கும் அதிக மதிப்புள்ள இந்த நிலத்தை அரசு உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம்…
கோவையில் பிப்ரவரி 9-ல் உணவு பதப்படுத்துதல் இலவச பயிற்சி!
-ச.ஷாலினி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (Micro, Small and Medium Enterprises) MSME மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் சார்பில் உணவு பதப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் பற்றிய பயிற்சி கோவையில் 5 நாட்கள் நடைபெறவிருக்கிறது. இந்த இலவச பயிற்சி பிப்ரவரி 9 முதல் 13 வரை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வடவள்ளி ராமசாமி சின்னம்மாள் அறக்கட்டளை அரங்கில் நடைபெறுகிறது. பயிற்சியில் பங்கேற்கிறவர்கள் கீழ்க்காணும் துறைகளில் நேரடி செய்முறை பயிற்சியை பெறுவார்கள். மதிப்பு கூட்டப்பட்ட மற்றும் புதிய சிறுதானிய தயாரிப்புகள் பாரம்பரிய அரிசி உணவு மதிப்பு கூட்டல் பழம் மற்றும் காய்கறி பதப்படுத்தல் ஊறுகாய் செய்யும் தொழில் பேக்கரி தயாரிப்பு முறைகள் இத்துடன் சேர்ந்து பணியைத் துவங்குவது எப்படி, சரக்கு பாதுகாப்பு விதிமுறைகள், அரசு நிதி உதவிகள், மாநில/மத்திய திட்ட உதவிகள், மற்றும் வங்கி கடன் வழிமுறைகள் பற்றிய வழிகாட்டுதலும் வழங்கப்படுகிறது.…
குஜராத்தில் பிரமாண்ட ஹோட்டல் திறக்கும் ‘நிர்மா’ குழுமம்
-ச ஷாலினி 90-கிட்ஸ் அனைவருக்கும் நினைவில் நிற்கும் விளம்பரங்களில் ஒன்று ‘வாஷிங் பவுடர் நிர்மா’. ஒருகாலத்தில் வெறும் சலவைப் பவுடர் தயாரிப்பில் மட்டுமே ஈடுபட்டிருந்த இந்த நிறுவனம், காலப்போக்கில் தனது வர்த்தகத்தை பல துறைகளுக்கு விரிவுபடுத்தி இன்று ₹12,000 கோடி மதிப்புள்ள குழுமமாக வளர்ச்சி பெற்றுள்ளது. நுகர்வோர் பொருட்கள், ரசாயனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிர்மா குரூப், தற்போது தனது வர்த்தகத்தை மேலும் பல்வகைப்படுத்தும் நோக்கில் ஹோட்டல் துறையில் கால்பதிக்க திட்டமிட்டுள்ளது. வர்த்தக விரிவாக்கம் மற்றும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் பல்வேறு துறைகளில் செயல்பட்டு வரும் நிர்மா குழுமம், தனது வர்த்தகத்தை மேலும் விரிவாக்கும் நோக்கில் ஹோட்டல் துறையில் நுழைய திட்டமிட்டுள்ளது. தற்போது சோப்பு, சோடா ஆஷ், காஸ்டிக் சோடா, சிமெண்ட், சுகாதார சேவை உள்ளிட்ட பல துறைகளில் இயங்கி…
உணவு தொழில் துவங்க முதலீட்டாளர்களுக்கு தமிழக அரசு அழைப்பு | Investors Meet Coimbatore
-ச.ஷாலினி தமிழகத்தில் உணவு பதப்படுத்தும் (Food Processing) துறையை மேம்படுத்தவும், புதிய தொழில்முனைவோர்களை ஈர்க்கவும் தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவையில் பிரம்மாண்ட முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டி.என். அபெக்ஸ் (TN Apex) நடத்தும் முதலீட்டாளர் சந்திப்பு தமிழக அரசின் டி.என். அபெக்ஸ் (TN Apex) நிறுவனம் சார்பில் வரும் ஜனவரி 21-ஆம் தேதி கோயம்புத்தூரில் இந்தச் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. உணவு பதப்படுத்தும் தொழிலில் உள்ள நவீன வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். தொழிலதிபர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் இந்தச் சந்திப்பில் பங்கேற்பதன் மூலம் முதலீட்டாளர்கள் பின்வரும் தகவல்களை விரிவாகப் பெறலாம்: அரசு மானியங்கள்: மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் பல்வேறு நிதி உதவிகள். கடன் வசதிகள்: தொழில் துவங்கத் தேவையான எளிதான கடன் திட்டங்கள். மதிப்பு கூட்டுதல் (Value Addition): விளைபொருட்களை மதிப்பு…
ஹோட்டலில் தங்குபவர்களின் ஆன்லைன் உணவு ஆர்டர் அதிகரிப்பு
-ச.ஷாலினி ஹோட்டல்களில் தங்கும் பயணிகள் தங்களது அறைக்கே வந்து சேரும் ஹோட்டல் உணவை (Room Service) தவிர்த்துவிட்டு, Swiggy மற்றும் Zomato போன்ற உணவு விநியோக செயலிகள் மூலம் ஆர்டர் செய்வது தற்போது ஒரு புதிய டிரெண்டாக மாறி வருகிறது. இதனை பிரபல தொழிலதிபர் சுட்டிக்காட்டியுள்ளது இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. சமீபத்தில் அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த ஒரு பதிவில், ஹோட்டலுக்குள் டெலிவரி உணவு பையை கொண்டு செல்லும் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டார். அதில், “ஹோட்டல் துறையில் இது ஒரு புதிய மாற்றமாக உருவெடுத்து வருகிறது. இதை ஹோட்டல்கள் கவனிக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். குணால் பாலின் இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் பல காரணங்களை கமெண்டுகளில் அடுக்கி வருகின்றனர். அதன் முக்கிய காரணங்கள் இதோ: அதிக விலை: ஹோட்டல் மெனுவில் உள்ள உணவுகளின் விலை, வெளி உணவகங்களை விட பல மடங்கு அதிகமாக இருப்பது. குறைந்த தேர்வுகள்: ஹோட்டல் உணவகங்களில்…
IHCL தூத்துக்குடியில் 100 அறை கொண்ட “Ginger” ஹோட்டல் துவக்கம்
-ச.ஷாலினி இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி லிமிடெட் (IHCL), இந்தியாவின் மிகப்பெரிய ஹாஸ்பிட்டாலிட்டி குழுமம், தற்போது தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் (Thoothukudi/Tuticorin) புதிய Ginger பிராண்ட் ஹோட்டலை தொடங்குகிறது. இந்த புதிய Ginger ஹோட்டல் திருநெல்வேலி-தூத்துக்குடி நெடுஞ்சாலையில் 100 அறைகளுடன் அமைக்கப்படுகிறது. சிறப்பு அம்சங்கள் Qmin என்ற பிரபலமான உணவகம் பார் மீட்டிங்கிற்கான இடம் அழகான உடற்பயிற்சி மையம் போன்ற வசதிகள் இடம்பெற உள்ளன. தூத்துக்குடியின் கடல்சார் வர்த்தகம், உப்பு உற்பத்தி மற்றும் மீன்பிடித்தல் போன்ற பாரம்பரிய பலங்களுடன், ஆட்டோமொபைல் மற்றும் எரிசக்தித் துறைகளில் உள்ள பெரும் புராஜெக்ட்டுகளில் அதிகரித்து வரும் தேவையை இது நிவர்த்தி செய்யும். IHCL நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் செயல் துணைத் தலைவர் சுமா வெங்கடேஷ்: “தூத்துக்குடி தென்னிந்தியாவில் ஒரு முக்கியப் பொருளாதார மையமாக வளர்ந்து வருகிறது. வாகன மற்றும் எரிசக்தித் துறைகளில் உள்ள பெரும் திட்டங்களின் வளர்ச்சி, நீண்ட காலத் தங்குமிடங்களுக்கான குறிப்பிடத்தக்க தேவையை…
