Close Menu
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • முகப்பு
  • உணவகங்கள்
  • அடுமனை / பேக்கரி
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • சங்கங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • அயலக உணவகங்கள் 
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
  • எங்களை தொடர்பு கொள்ள
சூடான செய்திகள்

பனிக்கூழ் உலகில் இரு தசாப்தங்கள் தொடும் ஒரு சகாப்தம்; ‘சாம்பியன் ‘ இனி டெல்டா முழுவதும்

March 17, 2026

அடுமனைகளின் நலன் கருதி இயற்கை எரிவாயுவிற்கு முன்னுரிமை அளிக்க IBF கோரிக்கை

March 17, 2026

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசுக்கு ஹோட்டல் சங்கங்கள் அவசர கடிதம்

March 11, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook Instagram YouTube LinkedIn
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • முகப்பு
  • உணவகங்கள்
  • அடுமனை / பேக்கரி
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • சங்கங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • அயலக உணவகங்கள் 
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
  • எங்களை தொடர்பு கொள்ள
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • அடுமனை / பேக்கரி
  • அயலக உணவகங்கள் 
  • உணவகங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
Home»விநியோகஸ்தர்கள்»தமிழகத்தின் புகழ்பெற்ற ‘மன்னா’ பிராண்டைக் கைப்பற்றியது ரிலையன்ஸ்
விநியோகஸ்தர்கள்

தமிழகத்தின் புகழ்பெற்ற ‘மன்னா’ பிராண்டைக் கைப்பற்றியது ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் வசம் சென்ற தமிழகத்தின் 'மன்னா' பிராண்ட்: அதிரடி பிசினஸ் அப்டேட்
Shalini ChandrasekarBy Shalini ChandrasekarFebruary 11, 2026No Comments1 Min Read1 Views
Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link
Reliance Consumer, Manna Brand, Southern Health Foods, Tamil Nadu Business, Millets Health Food, ரிலையன்ஸ், மன்னா பிராண்ட்
Share
Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link

இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் நுகர்வோர் பொருட்கள் பிரிவான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புரோடக்ட்ஸ் (RCPL), தமிழகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற சதர்ன் ஹெல்த் புட்ஸ் (Southern Health Foods) நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது. இந்த நிறுவனம் ‘மன்னா’ (Manna) என்ற பெயரில் ஆரோக்கிய உணவுப் பொருட்களைத் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

உதயம், இண்டிபெண்டன்ஸ் வரிசையில் மன்னா:

ரிலையன்ஸ் நிறுவனத்தின் வசம் ஏற்கனவே உதயம் (Udhaiyam), இண்டிபெண்டன்ஸ் (Independence) மற்றும் SiL போன்ற பிராண்டுகள் உள்ளன. இப்போது ‘மன்னா’ பிராண்டையும் இணைத்திருப்பதன் மூலம், வேகமாக வளர்ந்து வரும் சிறுதானியங்கள் மற்றும் ஆரோக்கிய உணவுப் பொருட்கள் சந்தையில் ரிலையன்ஸ் தனது பிடியை வலுப்படுத்தியுள்ளது.

20 ஆண்டுகால நம்பிக்கை

கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் ஆரோக்கிய உணவுகளுக்கான முன்னணி பிராண்டாக ‘மன்னா’ திகழ்கிறது. குறிப்பாக சிறுதானிய மாவுகள், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவுகள், ஓட்ஸ் மற்றும் உலர் பழங்கள் போன்ற பிரிவுகளில் மன்னா மக்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையைப் பெற்றுள்ளது.

நிர்வாகத்தின் கருத்து

இந்த ஒப்பந்தம் குறித்து ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புரோடக்ட்ஸ் இயக்குனர் டி. கிருஷ்ணகுமார் கூறுகையில்:

“தமிழகத்தின் மிகவும் நம்பகமான பிராண்டுகளில் ஒன்றான மன்னா, ஆரோக்கியம் மற்றும் சத்துணவுப் பிரிவில் ரிலையன்ஸை மேலும் வலுப்படுத்தும். எங்களது விநியோகச் சங்கிலி (Supply-chain) மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுத் திறனைப் பயன்படுத்தி, தென்னிந்தியாவில் மட்டுமே பிரபலமாக உள்ள ‘மன்னா’வை இந்தியா முழுவதும் கொண்டு செல்வதே எங்கள் நோக்கம்” எனத் தெரிவித்தார்.

மக்களின் உணவுப் பழக்கம் ஆரோக்கியத்தை நோக்கி மாறி வரும் நிலையில், தரமான சத்துணவுப் பொருட்களை மலிவு விலையில் இந்தியா முழுவதும் கொண்டு செல்ல இந்த கையகப்படுத்தல் உதவும் என்று ரிலையன்ஸ் நம்புகிறது.

Manna Brand Millets Health Food Reliance Consumer Southern Health Foods Tamil Nadu Business மன்னா பிராண்ட் ரிலையன்ஸ்
Share. Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link
Previous Articleகர்நாடகாவில் தனது ஹோட்டல் சேவையை விரிவாக்கம் செய்யும் தி ஃபெர்ன்: பெலகாவியில் 2-வது கிளை தொடக்கம்
Next Article டெல்லியில் எகிறும் ஹோட்டல் வாடகை – மத்திய அமைச்சர் அவசர ஆலோசனை
Shalini Chandrasekar

    தொடர்புடைய பதிவுகள்

    சொமேட்டோ, ஸ்விகிக்கு செக் – உணவு விநியோகத்தில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!

    February 12, 2026

    சிறுதானிய திண்பண்டத்தை விரைவில் அறிமுகப்படுத்தும் ’அரவிந்த் செட்டிநாடு ஸ்நாக்ஸ்’

    February 7, 2026

    வணிக செயல்பாடுகளை விரிவாக்கம் செய்கிறது ‘FNB Needs’

    January 28, 2026

    தமிழகத்தின் பாரம்பரிய ‘உதயம்’ பிராண்டை கைப்பற்றியது ரிலையன்ஸ்: தேசிய அளவில் விரிவாக்கம் செய்ய திட்டம்!

    January 21, 2026
    Leave A Reply Cancel Reply

    தேடுங்கள்
    Follow Us On Social Media
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    சமீபத்திய முக்கிய செய்திகள்
    உணவு உற்பத்தியாளர்கள்
    3 Mins Read131 Views

    பனிக்கூழ் உலகில் இரு தசாப்தங்கள் தொடும் ஒரு சகாப்தம்; ‘சாம்பியன் ‘ இனி டெல்டா முழுவதும்

    By Swaminathan BalasubramanianMarch 17, 20260

    சொக்கப்பன் சீ (cbedit@imaws.org) கலாச்சாரப் பெருமையும் வணிகச் செழிப்பும் கொண்ட கும்பகோணத்தில், உணவுக் கலை மரபுகள் மிக ஆழமாக வேரூன்றியுள்ளன.…

    அடுமனைகளின் நலன் கருதி இயற்கை எரிவாயுவிற்கு முன்னுரிமை அளிக்க IBF கோரிக்கை

    March 17, 2026

    கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசுக்கு ஹோட்டல் சங்கங்கள் அவசர கடிதம்

    March 11, 2026

    மயிலாடுதுறை மற்றும் நெய்வேலியில் தமிழ் பால் நிறுவனத்தின் புதிய விநியோக மையங்கள் திறப்பு

    March 5, 2026
    வலைப்பதிவு வகைகள்
    • Uncategorized (4)
    • அடுமனை / பேக்கரி (4)
    • அயலக உணவகங்கள்  (1)
    • உணவகங்கள் (27)
    • உணவு உற்பத்தியாளர்கள் (8)
    • சங்கங்கள் (9)
    • விநியோகஸ்தர்கள் (4)
    வலைப்பதிவு காப்பகங்கள்
    • March 2026 (4)
    • February 2026 (20)
    • January 2026 (21)
    • December 2025 (3)
    • November 2025 (7)
    கிச்சன் ஹெரால்ட்
    கிச்சன் ஹெரால்ட்

    கிச்சன் ஹெரால்ட் என்பது இந்திய சமையல்காரர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், உணவு கையாளுபவர்கள் சமூகம் மற்றும் உலகளாவிய சமையல் சமூகத்திற்கான முன்னணி B2B டிஜிட்டல் ஊடகமாகும். நாங்கள் உலகளாவிய உணவுத் துறையைக் கண்காணித்து, எங்கள் வாசகர்களுக்கு சமீபத்திய செய்திகள், வேலை காலியிடங்கள் நேர்காணல்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்குகிறோம். முக்கியமாக ஹோட்டல் உரிமையாளர்கள், சமையல்காரர்கள், பேக்கரி உரிமையாளர்கள், உணவு உற்பத்தியாளர்கள், கொள்முதல் மேலாளர்கள், விநியோகஸ்தர்கள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் பலவற்றைச் சென்றடையும் நாங்கள், HoReCA பிரிவுக்கு மிகவும் விரும்பப்படும் உணவு போர்டல்.

    Facebook Instagram YouTube LinkedIn
    வலைப்பதிவு வகைகள்
    • Uncategorized (4)
    • அடுமனை / பேக்கரி (4)
    • அயலக உணவகங்கள்  (1)
    • உணவகங்கள் (27)
    • உணவு உற்பத்தியாளர்கள் (8)
    • சங்கங்கள் (9)
    • விநியோகஸ்தர்கள் (4)
    பயனுள்ள இணைப்புகள்
    • முகப்பு
    • எங்கள் எழுத்தாளர்கள்
    • எங்கள் நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
    • எங்களை தொடர்பு கொள்ள
    • தனியுரிமைக் கொள்கை
    பதிப்புரிமை © 2021-2026 - கிச்சன் ஹெரால்ட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
    உங்கள் நிறுவனத்திற்கான தொழில்முறை வலைத்தளத்தை DotBrix இலிருந்து பெறுங்கள்.

    Type above and press Enter to search. Press Esc to cancel.