Close Menu
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • முகப்பு
  • உணவகங்கள்
  • அடுமனை / பேக்கரி
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • சங்கங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • அயலக உணவகங்கள் 
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
  • எங்களை தொடர்பு கொள்ள
சூடான செய்திகள்

பனிக்கூழ் உலகில் இரு தசாப்தங்கள் தொடும் ஒரு சகாப்தம்; ‘சாம்பியன் ‘ இனி டெல்டா முழுவதும்

March 17, 2026

அடுமனைகளின் நலன் கருதி இயற்கை எரிவாயுவிற்கு முன்னுரிமை அளிக்க IBF கோரிக்கை

March 17, 2026

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசுக்கு ஹோட்டல் சங்கங்கள் அவசர கடிதம்

March 11, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook Instagram YouTube LinkedIn
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • முகப்பு
  • உணவகங்கள்
  • அடுமனை / பேக்கரி
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • சங்கங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • அயலக உணவகங்கள் 
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
  • எங்களை தொடர்பு கொள்ள
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • அடுமனை / பேக்கரி
  • அயலக உணவகங்கள் 
  • உணவகங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
Home»உணவகங்கள்»குஜராத்தில் பிரமாண்ட ஹோட்டல் திறக்கும் ‘நிர்மா’ குழுமம்
உணவகங்கள்

குஜராத்தில் பிரமாண்ட ஹோட்டல் திறக்கும் ‘நிர்மா’ குழுமம்

தனது வர்த்தகத்தை மேலும் பல்வகைப்படுத்தும் நோக்கில் ஹோட்டல் துறையில் கால்பதிக்க திட்டமிட்டுள்ளது
Swaminathan BalasubramanianBy Swaminathan BalasubramanianJanuary 19, 2026No Comments2 Mins Read1 Views
Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link

-ச ஷாலினி 

90-கிட்ஸ் அனைவருக்கும் நினைவில் நிற்கும் விளம்பரங்களில் ஒன்று ‘வாஷிங் பவுடர் நிர்மா’. ஒருகாலத்தில் வெறும் சலவைப் பவுடர் தயாரிப்பில் மட்டுமே ஈடுபட்டிருந்த இந்த நிறுவனம், காலப்போக்கில் தனது வர்த்தகத்தை பல துறைகளுக்கு விரிவுபடுத்தி இன்று ₹12,000 கோடி மதிப்புள்ள குழுமமாக வளர்ச்சி பெற்றுள்ளது.

நுகர்வோர் பொருட்கள், ரசாயனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிர்மா குரூப், தற்போது தனது வர்த்தகத்தை மேலும் பல்வகைப்படுத்தும் நோக்கில் ஹோட்டல் துறையில் கால்பதிக்க திட்டமிட்டுள்ளது. வர்த்தக விரிவாக்கம் மற்றும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் பல்வேறு துறைகளில் செயல்பட்டு வரும் நிர்மா குழுமம், தனது வர்த்தகத்தை மேலும் விரிவாக்கும் நோக்கில் ஹோட்டல் துறையில் நுழைய திட்டமிட்டுள்ளது. தற்போது சோப்பு, சோடா ஆஷ், காஸ்டிக் சோடா, சிமெண்ட், சுகாதார சேவை உள்ளிட்ட பல துறைகளில் இயங்கி வரும் இந்த மாபெரும் நிறுவனம், உயர்தர ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ளது.

இந்த ஹோட்டல் ஆடம்பர சந்தையை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட உள்ளது. இதில் மொத்தம் 555 அறைகள் இருக்கும். அகமதாபாத்தின் சர்கேஜ் – காந்திநகர் நெடுஞ்சாலையில் இந்த ஹோட்டல் அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்த பிறகு, கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும். இந்த ஹோட்டல் திட்டம், உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஹோட்டலை நிர்மா குழுமம் நேரடியாக இயக்க திட்டமில்லை என்றும், அதற்காக சர்வதேச ஹோட்டல் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இதில் இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி லிமிடெட் (IHCL), ஹையாட் ஹோட்டல்ஸ், மாரியட் இன்டர்நேஷனல் போன்ற முன்னணி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.
பெரிய ஹோட்டல் பிராண்டுகள் இணைந்தால், ஹோட்டலின் தரத்தை உயர்த்த முடியும் என்பதோடு, உலகளாவிய அனுபவத்தையும் கொண்டு வர முடியும் என்பது நிர்மா குழுமத்தின் நம்பிக்கை.

இந்த ஹோட்டல் 2030 காமன்வெல்த் விளையாட்டுகளுக்கு முன்பே செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Ahmedabad News Business News Tamil Five Star Hotel Hospitality Sector Hotel Industry Luxury Hotels India Nirma Group
Share. Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link
Previous Articleஉணவு தொழில் துவங்க முதலீட்டாளர்களுக்கு தமிழக அரசு அழைப்பு | Investors Meet Coimbatore
Next Article கோவையில் பிப்ரவரி 9-ல் உணவு பதப்படுத்துதல் இலவச பயிற்சி!
Swaminathan Balasubramanian

    தொடர்புடைய பதிவுகள்

    கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசுக்கு ஹோட்டல் சங்கங்கள் அவசர கடிதம்

    March 11, 2026

    சுற்றுலா பயணிகளை தஞ்சை நோக்கி படையெடுக்க வைத்த ‘பொன்னியின் செல்வன்’ – ’மெய்யழகன்’!

    February 12, 2026

    கர்நாடகாவில் தனது ஹோட்டல் சேவையை விரிவாக்கம் செய்யும் தி ஃபெர்ன்: பெலகாவியில் 2-வது கிளை தொடக்கம்

    February 11, 2026

    தமிழகத்தின் கருணை தொழிற்சாலை : சர்வதேச மையம் மூலம் உலகை ஆளும்  தெய்வீகச் சமையலறை

    February 10, 2026
    Leave A Reply Cancel Reply

    தேடுங்கள்
    Follow Us On Social Media
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    சமீபத்திய முக்கிய செய்திகள்
    உணவு உற்பத்தியாளர்கள்
    3 Mins Read131 Views

    பனிக்கூழ் உலகில் இரு தசாப்தங்கள் தொடும் ஒரு சகாப்தம்; ‘சாம்பியன் ‘ இனி டெல்டா முழுவதும்

    By Swaminathan BalasubramanianMarch 17, 20260

    சொக்கப்பன் சீ (cbedit@imaws.org) கலாச்சாரப் பெருமையும் வணிகச் செழிப்பும் கொண்ட கும்பகோணத்தில், உணவுக் கலை மரபுகள் மிக ஆழமாக வேரூன்றியுள்ளன.…

    அடுமனைகளின் நலன் கருதி இயற்கை எரிவாயுவிற்கு முன்னுரிமை அளிக்க IBF கோரிக்கை

    March 17, 2026

    கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசுக்கு ஹோட்டல் சங்கங்கள் அவசர கடிதம்

    March 11, 2026

    மயிலாடுதுறை மற்றும் நெய்வேலியில் தமிழ் பால் நிறுவனத்தின் புதிய விநியோக மையங்கள் திறப்பு

    March 5, 2026
    வலைப்பதிவு வகைகள்
    • Uncategorized (4)
    • அடுமனை / பேக்கரி (4)
    • அயலக உணவகங்கள்  (1)
    • உணவகங்கள் (27)
    • உணவு உற்பத்தியாளர்கள் (8)
    • சங்கங்கள் (9)
    • விநியோகஸ்தர்கள் (4)
    வலைப்பதிவு காப்பகங்கள்
    • March 2026 (4)
    • February 2026 (20)
    • January 2026 (21)
    • December 2025 (3)
    • November 2025 (7)
    கிச்சன் ஹெரால்ட்
    கிச்சன் ஹெரால்ட்

    கிச்சன் ஹெரால்ட் என்பது இந்திய சமையல்காரர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், உணவு கையாளுபவர்கள் சமூகம் மற்றும் உலகளாவிய சமையல் சமூகத்திற்கான முன்னணி B2B டிஜிட்டல் ஊடகமாகும். நாங்கள் உலகளாவிய உணவுத் துறையைக் கண்காணித்து, எங்கள் வாசகர்களுக்கு சமீபத்திய செய்திகள், வேலை காலியிடங்கள் நேர்காணல்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்குகிறோம். முக்கியமாக ஹோட்டல் உரிமையாளர்கள், சமையல்காரர்கள், பேக்கரி உரிமையாளர்கள், உணவு உற்பத்தியாளர்கள், கொள்முதல் மேலாளர்கள், விநியோகஸ்தர்கள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் பலவற்றைச் சென்றடையும் நாங்கள், HoReCA பிரிவுக்கு மிகவும் விரும்பப்படும் உணவு போர்டல்.

    Facebook Instagram YouTube LinkedIn
    வலைப்பதிவு வகைகள்
    • Uncategorized (4)
    • அடுமனை / பேக்கரி (4)
    • அயலக உணவகங்கள்  (1)
    • உணவகங்கள் (27)
    • உணவு உற்பத்தியாளர்கள் (8)
    • சங்கங்கள் (9)
    • விநியோகஸ்தர்கள் (4)
    பயனுள்ள இணைப்புகள்
    • முகப்பு
    • எங்கள் எழுத்தாளர்கள்
    • எங்கள் நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
    • எங்களை தொடர்பு கொள்ள
    • தனியுரிமைக் கொள்கை
    பதிப்புரிமை © 2021-2026 - கிச்சன் ஹெரால்ட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
    உங்கள் நிறுவனத்திற்கான தொழில்முறை வலைத்தளத்தை DotBrix இலிருந்து பெறுங்கள்.

    Type above and press Enter to search. Press Esc to cancel.