Close Menu
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • முகப்பு
  • உணவகங்கள்
  • அடுமனை / பேக்கரி
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • சங்கங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • அயலக உணவகங்கள் 
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
  • எங்களை தொடர்பு கொள்ள
  • English News
சூடான செய்திகள்

பாரதத்தின் பண்டைய தானியங்களும், மசாலாப் பொருட்களும், ஏன் உலகின் நாவை சுவைக்கின்றன?

May 15, 2026

சர்வதேச விமான நிலைய அந்தஸ்து மற்றும் மருத்துவ சுற்றுலாவால் புதிய உத்வேகம் பெறும் மதுரை ஹோட்டல் துறை

April 11, 2026

கடலூரில் முதல் கிளையைத் தொடங்கியது ‘நானாஸ்’ இனிப்பகம்

April 4, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook Instagram YouTube LinkedIn
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • முகப்பு
  • உணவகங்கள்
  • அடுமனை / பேக்கரி
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • சங்கங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • அயலக உணவகங்கள் 
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
  • எங்களை தொடர்பு கொள்ள
  • English News
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • அடுமனை / பேக்கரி
  • அயலக உணவகங்கள் 
  • உணவகங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
Home»உணவகங்கள்»திருவண்ணாமலையில் கால் பாதிக்கும் வேலூரின் டார்லிங் குழுமம்
உணவகங்கள்

திருவண்ணாமலையில் கால் பாதிக்கும் வேலூரின் டார்லிங் குழுமம்

வேலூரின் டார்லிங் உணவகம் இனி திருவண்ணாமலையிலும்: விரிவாக்கத் திட்டம் குறித்து இயக்குநர் முரளி வேங்கடசுப்பு பேட்டி!
Swaminathan BalasubramanianBy Swaminathan BalasubramanianJanuary 15, 2026No Comments3 Mins Read216 Views
Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link

– பால ஸ்வாமிநாதன் [முழிபெயர்ப்பு : ச . ஷாலினி ]

வேலூரின் முன்னணி உணவக சங்கிலியான டார்லிங் குழுமம் (Darling Group of Restaurants) அடுத்தக்கட்ட நகர்வாக தன்னை விரிவுப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளது. வேலூர் நகரின் புறநகர் பகுதிகளில் புதிய உணவகங்களை தொடங்க திட்டமிட்டுள்ள இக்குழுமம், அருகிலுள்ள திருவண்ணாமலை மாவட்டத்திலும் தனது சேவையை கொண்டு செல்ல தயாராகி வருகிறது.

இதுகுறித்து டார்லிங் குழும இயக்குநர் முரளி வேங்கடசுப்பு பேசுகையில், “நாங்கள் தொடங்கும் ஒவ்வொரு உணவகமும் அந்த இடத்தின் மண் சார்ந்த கலாசாரம், பாரம்பரியம் மற்றும் உணவுப் பழக்கங்களை பிரதிபலிக்க வேண்டும் என்பதே எங்களின் விரிவாக்க திட்டத்தின் அடிப்படை. தற்போது வேலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 30 உணவகங்களை (சைவம் மற்றும் அசைவம்) நாங்கள் நடத்தி வருகிறோம். இதேபோல் வேலூர், புதுச்சேரி மற்றும் காஞ்சிபுரத்தில் 13 பேக்கரி கிளைகளும் இயங்கி வருகின்றன” என்றார்.

டார்லிங் குழுமம் தற்போது CMC (Christian Medical College) அருகே அறைகளுடன் கூடிய ஒரு அசைவ உணவகத்தை தொடங்கும் திட்டத்தையும் கொண்டுள்ளது. “ஒரே மாதிரியான உணவக மாடல்களில் சிக்கிக்கொள்ளாமல், அனைத்து வகையான உணவக வடிவங்களையும் நாங்கள் முயற்சி செய்ய விரும்புகிறோம். அதில் எனக்கு மிகவும் விருப்பமானது நெடுஞ்சாலை உணவகங்கள். சென்னை–பெங்களூரு நெடுஞ்சாலை வேகமாக வளர்ந்து வருவதால், அந்த வழித்தடங்களில் டார்லிங் குழுமம் இருக்க வேண்டும் என்பதே எங்களின் எண்ணம்” என்றும் கூறினார் முரளி. பேக்கரி துறை டார்லிங் குழுமத்திற்கு ஏற்கனவே வலுவாக இருப்பதால், அடுத்த கட்டமாக சென்னை பகுதியில் பேக்கரி விரிவாக்கத்தையும் அவர்கள் பரிசீலித்து வருகின்றனர்.

அதே நேரத்தில், டார்லிங் குழுமம் குறித்து நிலவும் ஒரு குழப்பத்தையும் முரளி தெளிவுபடுத்தினார். “பலர் எங்களை உணவு தயாரிப்பு (food manufacturing) நிறுவனமாக நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. டார்லிங் என்பது ஒரு உணவக பிராண்ட் மட்டுமே. உணவு தயாரிப்பு தொழிலில் நாங்கள் இல்லை. டார்லிங் பிராண்டின் வர்த்தக முத்திரை மட்டும் எங்களிடம் உள்ளது” என்றார்.

மாறிவரும் உணவு பழக்கங்கள்

இன்றைய வாடிக்கையாளர்களின் உணவு பழக்கங்கள் மிகவும் வேகமாகவும், கணிக்க முடியாத வகையிலும் மாறி வருவதாக முரளி குறிப்பிட்டார். “Gen-Z தலைமுறைக்கு பாரம்பரிய உணவுகள் பிடிக்காது என்ற ஒரு பொதுவான நம்பிக்கை உள்ளது. ஆனால் எங்கள் அனுபவம் அதற்கு முற்றிலும் மாறானது. எங்கள் உணவகங்களில் இளம் தலைமுறையினர் அதிகமாக தமிழ் பாரம்பரிய மதிய உணவையே விரும்புகிறார்கள். தினமும் பர்கர், பீட்சா சாப்பிடுவார்கள் என்று நினைப்பது உண்மையல்ல” என்றார்.

அதே சமயம், ஆரோக்கிய உணவுகள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்துள்ளதாகவும், சில வாடிக்கையாளர்கள் French, Italian, Thai போன்ற வெளிநாட்டு உணவுகளை முயற்சிக்க ஆர்வம் காட்டுவதாகவும் கூறினார். “ஒரு ஹோட்டல் உரிமையாளராக எப்போதும் இந்த மாற்றங்களை கவனித்து, அதற்கேற்ப தயாராக இருக்க வேண்டும்” என்றார்.

இன்றைய காலத்தில் உணவகத்திற்கு செல்வது பசி தீர்க்க மட்டும் அல்ல என்று குறிப்பிட்ட முரளி, Gen-Z வாடிக்கையாளர்களை குறிவைக்கும் போது, உணவகத்தின் தோற்றம், அலங்காரம், பின்னணி மற்றும் உணவின் பரிமாற்றம் மிக முக்கியம். உணவகங்கள் இன்று ‘Instagram-க்கு ஏற்ற’ இடங்களாக மாறி வருகின்றன. உணவின் சுவை மட்டுமல்ல, தோற்றமும் அவசியமாகிவிட்டது” என்றார்.

உணவகத் துறையின் சவால்கள்

உணவகத் துறையில் தற்போது மிகப்பெரிய சவால் லாபம் குறைந்து வருவது என்று முரளி சுட்டிக்காட்டினார். “பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தரத்தை குறைக்காமல் உயர்தர பொருட்களை வாங்குவது எளிதான விஷயம் அல்ல. ஆனால் அதற்கேற்ப ஹோட்டல் உரிமையாளர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம்” என்றார். உணவகத்திற்கு அதிக வாடிக்கையாளர்களை ஈர்ப்பது மதிய உணவுதான் என்றும், வருமானத்தைப் பார்க்கும்போது combo lunch-ஐ விட ala-carte menu அதிக லாபம் தருவதாகவும் அவர் விளக்கினார்.

டார்லிங் குழுமத்தின் நிர்வாக முறை பற்றி பேசுகையில், “நாங்கள் சிஸ்டம் அடிப்படையிலான நிர்வாகத்தை பின்பற்றுகிறோம். ஒரே ஒரு நபரை சார்ந்து செயல்படுவதில்லை. செயல்முறைகளே எங்கள் நாளைய வேலைகளை நிர்ணயிக்கின்றன” என்றார். “புதிய தலைமுறையினர் கண்டிப்பாக புதுமை மற்றும் புதிய யோசனைகளை கொண்டு வர வேண்டும். அதே நேரத்தில், முதல் தலைமுறையுடன் நல்ல புரிதல் மற்றும் மரியாதை மிக அவசியம். விளம்பரம் மற்றும் சுயபிரச்சாரம் மீது அதிக கவனம் செலுத்த வேண்டாம். தரமான, சுவையான உணவுதான் மிகச் சிறந்த விளம்பரம். பல ஆண்டுகளாக குடும்பம் உருவாக்கிய பிராண்டின் மதிப்பை பாதுகாப்பது இரண்டாம் தலைமுறையின் மிகப் பெரிய பொறுப்பு” என இரண்டாம் தலைமுறை தொழில்முனைவோருக்கு முக்கியமான அறிவுரையும் கூறினார்.

வேலூர் மாநகரின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் டார்லிங் குழுமம் (Darling Group of Restaurants), கடந்த பல தசாப்தங்களாக சுவை மற்றும் தரத்திற்குப் பெயர் பெற்ற ஒரு முன்னணி உணவக சங்கிலியாகும்.12

Darling Bakery Darling Group of Restaurants Darling Hotel Vellore Food Industry Challenges Gen-Z Food Trends Highway Hotels Tamil Nadu Murali Venkatasubbu Tiruvannamalai Restaurants Traditional Tamil Food Vellore Business News உணவு வணிகம் சென்னை பெங்களூரு நெடுஞ்சாலை உணவகங்கள் டார்லிங் குழுமம் டார்லிங் ஹோட்டல் தமிழ்நாட்டு உணவகங்கள் திருவண்ணாமலை உணவகங்கள் பாரம்பரிய உணவுகள் முரளி வேங்கடசுப்பு வேலூர் டார்லிங் உணவகம் வேலூர் பேக்கரி
Share. Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link
Previous Articleபெங்களூரு டூ சிட்னி: உலகை ஆளும் MTR.. ஆஸ்திரேலியாவிலும் இனி அசல் எம்.டி.ஆர் சுவை!
Next Article கலப்பட சர்ச்சை : ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தரத்தில் சமரசம் இல்லை என்று தன்னிலை விளக்கம்
Swaminathan Balasubramanian

    தொடர்புடைய பதிவுகள்

    சர்வதேச விமான நிலைய அந்தஸ்து மற்றும் மருத்துவ சுற்றுலாவால் புதிய உத்வேகம் பெறும் மதுரை ஹோட்டல் துறை

    April 11, 2026

    கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசுக்கு ஹோட்டல் சங்கங்கள் அவசர கடிதம்

    March 11, 2026

    சுற்றுலா பயணிகளை தஞ்சை நோக்கி படையெடுக்க வைத்த ‘பொன்னியின் செல்வன்’ – ’மெய்யழகன்’!

    February 12, 2026

    கர்நாடகாவில் தனது ஹோட்டல் சேவையை விரிவாக்கம் செய்யும் தி ஃபெர்ன்: பெலகாவியில் 2-வது கிளை தொடக்கம்

    February 11, 2026
    Leave A Reply Cancel Reply

    தேடுங்கள்
    Follow Us On Social Media
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    சமீபத்திய முக்கிய செய்திகள்
    Uncategorized
    5 Mins Read2 Views

    பாரதத்தின் பண்டைய தானியங்களும், மசாலாப் பொருட்களும், ஏன் உலகின் நாவை சுவைக்கின்றன?

    By Swaminathan BalasubramanianMay 15, 20260

    — ஆர். சங்கரன் கர்நாடகத்தின் கேழ்வரகு வயல்களிலிருந்து சிங்கப்பூரின் உயரிய கடைகள் வரை — பாரதத்தின் பண்டைய தானியங்களும் பாரம்பரிய…

    சர்வதேச விமான நிலைய அந்தஸ்து மற்றும் மருத்துவ சுற்றுலாவால் புதிய உத்வேகம் பெறும் மதுரை ஹோட்டல் துறை

    April 11, 2026

    கடலூரில் முதல் கிளையைத் தொடங்கியது ‘நானாஸ்’ இனிப்பகம்

    April 4, 2026

    பனிக்கூழ் உலகில் இரு தசாப்தங்கள் தொடும் ஒரு சகாப்தம்; ‘சாம்பியன் ‘ இனி டெல்டா முழுவதும்

    March 17, 2026
    வலைப்பதிவு வகைகள்
    • Uncategorized (6)
    • அடுமனை / பேக்கரி (4)
    • அயலக உணவகங்கள்  (1)
    • உணவகங்கள் (28)
    • உணவு உற்பத்தியாளர்கள் (8)
    • சங்கங்கள் (10)
    • விநியோகஸ்தர்கள் (4)
    வலைப்பதிவு காப்பகங்கள்
    • May 2026 (1)
    • April 2026 (2)
    • March 2026 (4)
    • February 2026 (20)
    • January 2026 (21)
    • December 2025 (3)
    • November 2025 (7)
    கிச்சன் ஹெரால்ட்
    கிச்சன் ஹெரால்ட்

    கிச்சன் ஹெரால்ட் என்பது இந்திய சமையல்காரர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், உணவு கையாளுபவர்கள் சமூகம் மற்றும் உலகளாவிய சமையல் சமூகத்திற்கான முன்னணி B2B டிஜிட்டல் ஊடகமாகும். நாங்கள் உலகளாவிய உணவுத் துறையைக் கண்காணித்து, எங்கள் வாசகர்களுக்கு சமீபத்திய செய்திகள், வேலை காலியிடங்கள் நேர்காணல்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்குகிறோம். முக்கியமாக ஹோட்டல் உரிமையாளர்கள், சமையல்காரர்கள், பேக்கரி உரிமையாளர்கள், உணவு உற்பத்தியாளர்கள், கொள்முதல் மேலாளர்கள், விநியோகஸ்தர்கள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் பலவற்றைச் சென்றடையும் நாங்கள், HoReCA பிரிவுக்கு மிகவும் விரும்பப்படும் உணவு போர்டல்.

    Facebook Instagram YouTube LinkedIn
    வலைப்பதிவு வகைகள்
    • Uncategorized (6)
    • அடுமனை / பேக்கரி (4)
    • அயலக உணவகங்கள்  (1)
    • உணவகங்கள் (28)
    • உணவு உற்பத்தியாளர்கள் (8)
    • சங்கங்கள் (10)
    • விநியோகஸ்தர்கள் (4)
    பயனுள்ள இணைப்புகள்
    • முகப்பு
    • எங்கள் எழுத்தாளர்கள்
    • எங்கள் நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
    • எங்களை தொடர்பு கொள்ள
    • தனியுரிமைக் கொள்கை
    பதிப்புரிமை © 2021-2026 - கிச்சன் ஹெரால்ட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
    உங்கள் நிறுவனத்திற்கான தொழில்முறை வலைத்தளத்தை DotBrix இலிருந்து பெறுங்கள்.

    Type above and press Enter to search. Press Esc to cancel.