Author: Swaminathan Balasubramanian
உணவு தொழில் துவங்க முதலீட்டாளர்களுக்கு தமிழக அரசு அழைப்பு | Investors Meet Coimbatore
-ச.ஷாலினி தமிழகத்தில் உணவு பதப்படுத்தும் (Food Processing) துறையை மேம்படுத்தவும், புதிய தொழில்முனைவோர்களை ஈர்க்கவும் தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவையில் பிரம்மாண்ட முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டி.என். அபெக்ஸ் (TN Apex) நடத்தும் முதலீட்டாளர் சந்திப்பு தமிழக அரசின் டி.என். அபெக்ஸ் (TN Apex) நிறுவனம் சார்பில் வரும் ஜனவரி 21-ஆம் தேதி கோயம்புத்தூரில் இந்தச் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. உணவு பதப்படுத்தும் தொழிலில் உள்ள நவீன வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். தொழிலதிபர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் இந்தச் சந்திப்பில் பங்கேற்பதன் மூலம் முதலீட்டாளர்கள் பின்வரும் தகவல்களை விரிவாகப் பெறலாம்: அரசு மானியங்கள்: மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் பல்வேறு நிதி உதவிகள். கடன் வசதிகள்: தொழில் துவங்கத் தேவையான எளிதான கடன் திட்டங்கள். மதிப்பு கூட்டுதல் (Value Addition): விளைபொருட்களை மதிப்பு…
ஹோட்டலில் தங்குபவர்களின் ஆன்லைன் உணவு ஆர்டர் அதிகரிப்பு
-ச.ஷாலினி ஹோட்டல்களில் தங்கும் பயணிகள் தங்களது அறைக்கே வந்து சேரும் ஹோட்டல் உணவை (Room Service) தவிர்த்துவிட்டு, Swiggy மற்றும் Zomato போன்ற உணவு விநியோக செயலிகள் மூலம் ஆர்டர் செய்வது தற்போது ஒரு புதிய டிரெண்டாக மாறி வருகிறது. இதனை பிரபல தொழிலதிபர் சுட்டிக்காட்டியுள்ளது இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. சமீபத்தில் அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த ஒரு பதிவில், ஹோட்டலுக்குள் டெலிவரி உணவு பையை கொண்டு செல்லும் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டார். அதில், “ஹோட்டல் துறையில் இது ஒரு புதிய மாற்றமாக உருவெடுத்து வருகிறது. இதை ஹோட்டல்கள் கவனிக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். குணால் பாலின் இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் பல காரணங்களை கமெண்டுகளில் அடுக்கி வருகின்றனர். அதன் முக்கிய காரணங்கள் இதோ: அதிக விலை: ஹோட்டல் மெனுவில் உள்ள உணவுகளின் விலை, வெளி உணவகங்களை விட பல மடங்கு அதிகமாக இருப்பது. குறைந்த தேர்வுகள்: ஹோட்டல் உணவகங்களில்…
IHCL தூத்துக்குடியில் 100 அறை கொண்ட “Ginger” ஹோட்டல் துவக்கம்
-ச.ஷாலினி இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி லிமிடெட் (IHCL), இந்தியாவின் மிகப்பெரிய ஹாஸ்பிட்டாலிட்டி குழுமம், தற்போது தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் (Thoothukudi/Tuticorin) புதிய Ginger பிராண்ட் ஹோட்டலை தொடங்குகிறது. இந்த புதிய Ginger ஹோட்டல் திருநெல்வேலி-தூத்துக்குடி நெடுஞ்சாலையில் 100 அறைகளுடன் அமைக்கப்படுகிறது. சிறப்பு அம்சங்கள் Qmin என்ற பிரபலமான உணவகம் பார் மீட்டிங்கிற்கான இடம் அழகான உடற்பயிற்சி மையம் போன்ற வசதிகள் இடம்பெற உள்ளன. தூத்துக்குடியின் கடல்சார் வர்த்தகம், உப்பு உற்பத்தி மற்றும் மீன்பிடித்தல் போன்ற பாரம்பரிய பலங்களுடன், ஆட்டோமொபைல் மற்றும் எரிசக்தித் துறைகளில் உள்ள பெரும் புராஜெக்ட்டுகளில் அதிகரித்து வரும் தேவையை இது நிவர்த்தி செய்யும். IHCL நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் செயல் துணைத் தலைவர் சுமா வெங்கடேஷ்: “தூத்துக்குடி தென்னிந்தியாவில் ஒரு முக்கியப் பொருளாதார மையமாக வளர்ந்து வருகிறது. வாகன மற்றும் எரிசக்தித் துறைகளில் உள்ள பெரும் திட்டங்களின் வளர்ச்சி, நீண்ட காலத் தங்குமிடங்களுக்கான குறிப்பிடத்தக்க தேவையை…
கலப்பட சர்ச்சை : ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தரத்தில் சமரசம் இல்லை என்று தன்னிலை விளக்கம்
– ச. ஷாலினி சென்னை/கோவை: சுமார் 45 ஆண்டுகால பாரம்பரியமிக்க ‘ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்’ நிறுவனம், தனது தயாரிப்புகளின் தரம் மற்றும் தூய்மை குறித்து எழுந்துள்ள வதந்திகளுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன் இது குறித்துப் பேசுகையில், தங்களது நிறுவனத்தின் வெற்றிக்கு அடிப்படையே “சத்தியம் மற்றும் தரம்” தான் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார். 45 ஆண்டுகள் பாரம்பரியமிக்க ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இனிப்புகள் அனைத்தும் சுத்தமான நெய்யினால் தயாரிக்கப்படுவதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன் தெரிவித்தார். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் 1979-ல் துவக்கப்பட்டது. கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியத்துடன் இனிப்பு, கார வகைகளை தயாரித்து விற்கிறோம் என அவர் மேலும் குறிப்பிட்டார். தமிழகம், வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் என, 68 கிளைகளைக் கொண்ட ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸில் 50,000 சதுர அடியில் உலகத்தரம் வாய்ந்த கிச்சன் செயல்படுகிறது. இங்கு உணவு பாதுகாப்பு துறையின் விதிகளுக்கு உட்பட்டு…
திருவண்ணாமலையில் கால் பாதிக்கும் வேலூரின் டார்லிங் குழுமம்
– பால ஸ்வாமிநாதன் [முழிபெயர்ப்பு : ச . ஷாலினி ] வேலூரின் முன்னணி உணவக சங்கிலியான டார்லிங் குழுமம் (Darling Group of Restaurants) அடுத்தக்கட்ட நகர்வாக தன்னை விரிவுப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளது. வேலூர் நகரின் புறநகர் பகுதிகளில் புதிய உணவகங்களை தொடங்க திட்டமிட்டுள்ள இக்குழுமம், அருகிலுள்ள திருவண்ணாமலை மாவட்டத்திலும் தனது சேவையை கொண்டு செல்ல தயாராகி வருகிறது. இதுகுறித்து டார்லிங் குழும இயக்குநர் முரளி வேங்கடசுப்பு பேசுகையில், “நாங்கள் தொடங்கும் ஒவ்வொரு உணவகமும் அந்த இடத்தின் மண் சார்ந்த கலாசாரம், பாரம்பரியம் மற்றும் உணவுப் பழக்கங்களை பிரதிபலிக்க வேண்டும் என்பதே எங்களின் விரிவாக்க திட்டத்தின் அடிப்படை. தற்போது வேலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 30 உணவகங்களை (சைவம் மற்றும் அசைவம்) நாங்கள் நடத்தி வருகிறோம். இதேபோல் வேலூர், புதுச்சேரி மற்றும் காஞ்சிபுரத்தில் 13 பேக்கரி கிளைகளும் இயங்கி வருகின்றன” என்றார். டார்லிங் குழுமம் தற்போது CMC (Christian Medical…
பெங்களூரு டூ சிட்னி: உலகை ஆளும் MTR.. ஆஸ்திரேலியாவிலும் இனி அசல் எம்.டி.ஆர் சுவை!
– குவைஷ் ஜெயின் , பத்திரிக்கையாளர் , கிட்சேன் ஹெரால்ட் (editorial1@imaws.org) இந்த கட்டுரையின் விளம்பரதார் பெங்களூரின் அடையாளங்களில் ஒன்றான MTR (Mavalli Tiffin Rooms) உணவகச் சங்கிலி, தற்போது ஆஸ்திரேலியாவில் தடம் பதித்து தனது விரிவாக்கப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. சிட்னியில் திறக்கப்படவுள்ள புதிய கிளையின் மூலம், இந்திய உணவுப் பிரியர்கள் பெங்களூருவில் அனுபவிக்கும் அதே அசல் சுவையை இனி ஆஸ்திரேலியாவிலும் பெற முடியும். சமூக வலைதளங்களில் ஒரு ‘ரீல்’ (Reel) மறையும் வேகத்தில் உணவு கலாச்சாரங்கள் மாறிக்கொண்டிருக்கும் இக்காலத்தில், நமக்குத் தெரிந்த, ஆரோக்கியமான, உண்மையான ஆறுதல் தரும் உணவின் மீதே மக்களின் ஆர்வம் எப்போதும் உள்ளது. கோடிக்கணக்கான மக்களுக்கு அந்த ‘ஆறுதல்’ தென்னிந்திய உணவுதான். உலகளாவிய ஃபியூஷன் (Fusion) உணவுகள் கவனத்தை ஈர்த்தாலும், ஆவி பறக்கும் இட்லியும், மொறுமொறுப்பான மசாலா தோசையும் தரும் மனநிறைவே தனி. இந்த நம்பிக்கையை கடந்த நூறு ஆண்டுகளாகக் காப்பாற்றி வரும் ஒரு நிறுவனம் என்றால்…
தமிழகத்தில் ஆன்மீகச் சுற்றுலாவின் அபரிமிதமான வளர்ச்சி: கோவில் நகரங்களில் உணவகத் துறை 100% வளர்ச்சி கண்டுள்ளது
பரத் உமாபதி ,சிறப்பு செய்தியாளர் , கிட்சன் ஹெரால்ட் (cbedit@imaws.org) தமிழ்நாட்டின் திருச்செந்தூர், ராமேஸ்வரம் மற்றும் பழனி போன்ற கோயில் நகரங்களில் ஆன்மீகச் சுற்றுலா அடைந்துள்ள அசாத்திய வளர்ச்சி, இந்த புனித தலங்களில் உள்ள உணவு மற்றும் உணவகத் துறையின் வளர்ச்சி வரைபடத்தில் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது. கோவிட் காலத்திற்குப் பிந்தைய ஆண்டுகளில் ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ள உணவகத் துறை, வணிக அளவு மற்றும் வருவாய் அடிப்படையில் 100% க்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த கோயில் நகரங்களில் உணவுத் தொழில் செய்து வரும் பல பங்குதாரர்களின் கருத்துப்படி, புத்தாண்டு பிறக்கும் வேளையில் புதிய நிறுவனங்களும், ஏற்கனவே புகழ்பெற்ற உணவகச் சங்கிலிகளும் இந்தச் சந்தையில் கால் பதித்து வருகின்றன. தமிழ்நாட்டின் இந்த பிரபலமான புனிதத் தலங்கள் மற்றும் சுற்றுலா நகரங்களில் ஆன்மீகச் சுற்றுலாவின் எழுச்சி உணவுத் துறையின் வளர்ச்சிக்கு எந்தளவு உதவியுள்ளது என்பதைக் கண்டறிய, ‘கிச்சன் ஹெரால்டு’ (Kitchen Herald)…
