Author: Shalini Chandrasekar

இந்த கட்டுரையை வழங்குபவர் சிறுதானியம் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகளை இன்றைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கில், பாரம்பரியத்துடன் நவீனத்தை புகுத்தி அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் ‘மண்வாசனை டிரடிஷனல் ஃபுட் புராடெக்ட்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் மேனகா. தவிர, மாப்பிள்ளை சம்பா முதல் தூய மல்லி வரை, பாரம்பரிய அரிசி வகைகளைச் சரியான பக்குவத்தில் ‘ஈர மாவாக’ மாற்றி, இன்று ஹோட்டல்கள், கேட்டரிங் நிறுவனங்கள் மற்றும் கல்லூரி உணவகங்களுக்குத் தடையின்றி விநியோகம் செய்து வருகிறார். அவரிடம் பே பாரம்பரிய சுவையை மாற்றாமல் இன்றைய ‘Gen Z’ தலைமுறைக்கு ஏற்றவாறு உணவை மாற்றுவதில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன? சவால்கள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் எங்கள் பலமே நாங்கள் பொருட்களை இயற்கை விவசாயிகளிடமிருந்து நேரடியாக பெறுவது தான். என்ன செய்தாலும் இயற்கை முறையில் விளையும் எந்தப் பொருளுளின் உண்மையான சுவையும் மாறாது. ஒவ்வொரு பொருளையும் சுத்தம் செய்து, வறுத்து பாக்கெட் செய்வதால் அதன் சுவையும்,…

Read More

திருச்சி மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) துறை, குறிப்பாக உணவு சார்ந்த உற்பத்தி மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களால் பெரும் வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. உயரும் உத்யம் (UDYAM) பதிவுகள் மாவட்ட தொழில் மையத்தின் (DIC) புள்ளிவிவரப்படி, 2025 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் மட்டும் உத்யம் பதிவுகள் 24,700-ஐத் தாண்டியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த வளர்ச்சியில், சேவைத் துறை நிறுவனங்கள் (Service Sector) பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த நிதியாண்டின் புதிய பதிவுகளில் பாதிக்கும் மேற்பட்டவை சேவை துறையைச் சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. உணவுத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் உணவுத் துறை குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தைக் கண்டு வருகிறது. குறிப்பாக ‘ஹோம் பேக்கரி’ மற்றும் சிறிய உணவகங்கள் தினை சார்ந்த கேக்குகள், ரெடி-டு-ஈட் ஸ்நாக்ஸ் மற்றும் சத்தான உணவுகளை வழங்கி வருகின்றன. இது குறித்து உணவு பதப்படுத்தும் தொழில்முனைவோர்…

Read More

இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தி, ஸ்மார்ட் நகர மேம்பாடு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில் ஏற்கனவே செயல்பட்டு வரும் வியட்நாமின் மிகப்பெரிய கூட்டு நிறுவனமான வின்குரூப் (Vingroup), தற்போது தனது வர்த்தகத்தை சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு உள்கட்டமைப்புத் துறைக்கும் விரிவுபடுத்த உள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் பிரம்மாண்டமான பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் சொகுசு விடுதிகளை (Resorts) அமைக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சிமாநாடு 2026-ல், வின்குரூப்பின் மின்சார வாகனப் பிரிவான வின்ஃபாஸ்ட் (VinFast) ஆசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஃபாம் சன் சாவ் (Pham Sanh Chau), தமிழக அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான ‘கைடன்ஸ் தமிழ்நாடு’ (Guidance Tamil Nadu) அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டார். ஓராண்டிற்கு முன்புதான் வின்ஃபாஸ்ட் நிறுவனம் தனது முதல் வெளிநாட்டு உற்பத்தி ஆலையை தூத்துக்குடியில் அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கியது…

Read More

தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பயணிகளுக்குப் பாதுகாப்பான மற்றும் தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்யத் தமிழக அரசு மற்றும் சுற்றுலாத்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 1. அரசு – தனியார் கூட்டு முயற்சி (PPP Model) தமிழகத்தின் முக்கிய நெடுஞ்சாலைகளான சென்னை – திருச்சி (GST Road), சென்னை – பெங்களூரு மற்றும் கோவை – மதுரை சாலைகளில் புதிய ‘சுற்றுலா உணவக மையங்களை’ (Way-side Amenities) அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதில் உணவகங்கள் மட்டுமல்லாது, எரிபொருள் நிலையம், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் பாயிண்ட் (EV Charging) மற்றும் தூய்மையான ஓய்வறைகள் ஒரே இடத்தில் அமையவுள்ளன. 2. உணவின் தரம் மற்றும் விலை நிர்ணயம் நெடுஞ்சாலை உணவகங்களில் அதிக விலை வசூலிக்கப்படுவதாக வரும் புகார்களைத் தவிர்க்க 2026-ல் புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன: விலைப் பட்டியல் கட்டாயம்: உணவகத்தின் முகப்பிலேயே…

Read More

திரையில் மட்டுமல்லாது நிஜ வாழ்விலும் ஏழைகளின் பசி போக்கும் ‘அன்னதான பிரபுவாக’ நடிகர் கார்த்தி உருவெடுத்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் அவரது ரசிகர் மன்றம் சார்பில் நடத்தப்பட்டு வரும் ‘கார்த்தி மக்கள் நல மன்ற உணவகம்’ வெற்றிகரமாக 1000-வது நாளை எட்டியுள்ளது. வெறும் 10 ரூபாய்க்கு நிறைவான உணவு: இன்றைய காலகட்டத்தில் ஒரு டீ குடிக்கவே 12 ரூபாய் தேவைப்படும் நிலையில், இந்த உணவகத்தில் வெறும் ரூ. 10-க்கு தரமான மதிய உணவு வழங்கப்படுகிறது. சுமார் 50 ரூபாய் மதிப்புள்ள சுவையான வெஜிடபிள் பிரிஞ்சி (பிரியாணி) ஏழை எளிய மக்களுக்காக இந்த மலிவு விலையில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தொடரும் அறப்பணி: சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கார்த்தி மக்கள் மன்ற தலைமை அலுவலக வாசலில் இந்த உணவகம் செயல்பட்டு வருகிறது. நேரம்: திங்கள் முதல் சனி வரை, மதியம் 12:30 மணி முதல் 1:30 மணி வரை. பயனாளிகள்: நாளொன்றுக்கு சராசரியாக 120 முதல்…

Read More

முன்னணி ஹோட்டல் குழுமமான காமத் ஹோட்டல்ஸ் இந்தியா (Kamat Hotels India), 2026 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு (Q3 FY26) நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. லாபத்தில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக அந்நிறுவனத்தின் பங்குகள் இன்று 9.04% சரிந்து ரூ. 200.35 என்ற விலைக்கு வீழ்ச்சியடைந்தன. லாபம் மற்றும் வருவாய் விபரங்கள்: கடந்த 2025 நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ. 26.18 கோடியாக இருந்த நிகர லாபம், நடப்பு நிதியாண்டில் (Q3 FY26) 33.19% சரிந்து ரூ. 17.30 கோடியாக குறைந்துள்ளது. இருப்பினும், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 11.64% உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ரூ. 105.46 கோடியாக இருந்த வருவாய், இந்த காலாண்டில் ரூ. 117.74 கோடியாக அதிகரித்துள்ளது. சரிவிற்கான காரணங்கள்: வருவாய் அதிகரித்திருந்தாலும், நிறுவனத்தின் செலவுகள் பெருமளவு அதிகரித்ததே லாபச் சரிவுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. மொத்த செலவுகள்: கடந்த ஆண்டை விட 29.19% அதிகரித்து ரூ. 92.88 கோடியாக உள்ளது.…

Read More

தமிழகத்தை உலகச் சுற்றுலா வரைபடத்தில் முதன்மையான இடத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் நடைபெற்ற ‘தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு 2026’ (Tamil Nadu Global Tourism Summit) மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், தமிழக சுற்றுலாத் துறை வரலாற்றிலேயே இல்லாத வகையில் பிரம்மாண்ட முதலீடுகள் குவிந்துள்ளன. 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்த இரண்டு நாள் மாநாட்டின் நிறைவில், மொத்தம் 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகின. இவற்றின் மொத்த மதிப்பு 22,795 கோடி ஆகும். இந்த முதலீடுகள் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஹோட்டல்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், ஆன்மீக சுற்றுலா மேம்பாடு மற்றும் சாகச சுற்றுலாத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. 66,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இந்த மாநாட்டின் மிக முக்கிய சாதனையாக, ஈர்க்கப்பட்டுள்ள முதலீடுகள் மூலம் சுமார் 66,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என அரசு…

Read More

தமிழகத்தை உலகளாவிய சுற்றுலா தலமாக மாற்றும் நோக்கில், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று (பிப்ரவரி 2, 2026) ‘தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு 2026’ பிரம்மாண்டமாகத் தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த மாநாட்டின் முதல் நாளிலேயே, முன்னணி ரியல் எஸ்டேட் மற்றும் ஹோட்டல் குழுமமான பிரிகேட் ஹோட்டல் வென்ச்சர்ஸ் (Brigade Hotel Ventures) நிறுவனம் தமிழக அரசுடன் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ₹1,100 கோடி முதலீடு – 3 புதிய ஹோட்டல்கள் இந்த ஒப்பந்தத்தின்படி, சென்னையில் சுமார் ₹1,100 கோடி முதலீட்டில் சர்வதேச தரத்திலான மூன்று புதிய சொகுசு ஹோட்டல்களை அந்நிறுவனம் அமைக்க உள்ளது. இதன் மூலம் சென்னையின் விருந்தோம்பல் துறை அடுத்த கட்டத்திற்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமையவுள்ள ஹோட்டல்கள் கிராண்ட் ஹயாட் (Grand Hyatt): சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) அமைய உள்ளது. ஜே.டபிள்யூ மேரியட் (JW Marriott): பழைய மகாபலிபுரம் சாலையில்…

Read More

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், தமிழகத்தின் சமையல் மற்றும் சுற்றுலாத் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ​தமிழகத்திற்கான முக்கிய சிறப்பம்சங்கள்: ​தேங்காய் மற்றும் முந்திரி மேம்பாடு: தமிழகத்தின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் தேங்காய் மற்றும் முந்திரி விவசாயத்தை மேம்படுத்த புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்திய முந்திரியை 2030-க்குள் சர்வதேச பிராண்டாக மாற்றும் திட்டம், தமிழக உணவுப் பதப்படுத்தும் (Food Processing) நிறுவனங்களுக்குப் பெரும் வாய்ப்பாக அமையும். ​பறவைகள் சரணாலயம் மற்றும் சுற்றுலா: தமிழகத்தின் புலிகாட் ஏரி (Pulicat Lake) பகுதியில் புதிய பறவைகள் கண்காணிப்புப் பாதைகள் (Bird Watching Trails) உருவாக்கப்படும். இது உள்ளூர் உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களின் வருவாயை அதிகரிக்க உதவும். ​மேற்குத் தொடர்ச்சி மலைச் சுற்றுலா: நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் (Podigai Malai) மலையேற்றப் பயிற்சிகள் மற்றும்…

Read More

இந்த நேர்காணலின் விளம்பரதாரர் திருநெல்வேலியின் ‘காப்பர் லீஃப் ஹோட்டல்’ அடுத்ததாக மதுரை மற்றும் தூத்துக்குடியில் கிளைகளை தொடங்க திட்டமிட்டுள்ளது. 42 அறைகள், சைவம் மற்றும் அசைவத்துக்கு என தனித்தனியே 2 ரெஸ்டாரெண்டுகள், காஃபி ஷாப், 3 விருந்து மண்டபம் (Banquet hall) என வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அமைந்திருக்கும் அந்த ஹோட்டலின் நிர்வாக இயக்குநர் திரு.ஸ்ரீ தர்ஷன் அவர்களிடம் பேசினோம்… சீசன் இல்லாத (Off season) காலங்களில் என்ன செய்வீர்கள்? அந்த நேரங்களில் நாங்கள் எங்களை சீர்படுத்திக்கொள்வோம். ஹோட்டலில் வேலை செய்பவர்களை அடுத்த சீசனுக்கு ஏற்றவாறு தயார் செய்வோம். நிலுவையில் இருக்கும் மற்ற பணிகளை முடிப்போம். வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் ஆஃபர் மற்றும் விழாக்களை முன்னெடுப்போம். கார்ப்பரேட் விழா – குடும்ப விழா… இவற்றில் எது உங்களுக்கு லாபம்? குறிப்பிட்டு சொல்ல முடியாது. குடும்ப விழாக்கள் நன்றாக இருக்கும். ஆனால் கார்ப்பரேட் விழாக்கள் தொடர்ச்சியாக இருக்கும். 365 நாட்களும் கார்ப்பரேட் தொழில்…

Read More