-KH News Desk
தமிழகத்தின் முன்னணி பால் நிறுவனமான தமிழ் பால் (Tamil Milk) நிறுவனம், தனது வணிகத்தை விரிவுபடுத்தும் நோக்கில் மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் புதிய விநியோக மையங்களை இந்த வாரம் திறந்து வைத்துள்ளது.
மயிலாடுதுறையில் புதிய கிளை
மயிலாடுதுறை, சம்பந்தக்குளம் பகுதியில் 03.03.2026 செவ்வாய்க்கிழமை அன்று தமிழ் பால் நிறுவனத்தின் விநியோக மையம் புதிய பொலிவுடன், புதிய இடத்தில் திறக்கப்பட்டது. இந்த மையத்தை தமிழ் பால் நிறுவனத்தின் செயல் இயக்குனர் திரு. K. தியாகராஜன் அவர்கள் திறந்து வைத்தார். மயிலாடுதுறை மேற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் திரு. மூவலூர் M. மூர்த்தி, மயிலாடுதுறை சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் திரு. முகம்மது ரியாஜ் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் Lion. Dr. K. செல்வம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தனர். தமிழ்நாடு வணிகச் சங்கங்களின் பேரமைப்பு – மயிலாடுதுறை மாவட்டத் தலைவரும், ATS குழும நிறுவனங்களின் நிறுவனருமான MJF. Ln. தமிழ்ச்செல்வன் முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார். இவ்விழாவிற்கு வருகை தந்தவர்களை விநியோகஸ்தர் திரு. D.S. ராஜசேகர் வரவேற்றார்.

நெய்வேலியில் கோலாகலத் திறப்பு
இதனைத் தொடர்ந்து, 05.03.2026 வியாழக்கிழமை அன்று கடலூர் மாவட்டம், நெய்வேலி காந்தி கிராமம் (வடக்குத்து) பகுதியில் மற்றொரு புதிய விநியோக மையம் திறக்கப்பட்டது. திரு. S. சத்யா சுப்பிரமணியன் குத்துவிளக்கேற்ற, திரு. G. ஹென்றி லியோன் ராஜ் முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார். S.S Enterprises விநியோக மையத்தின் விநியோகஸ்தர் திரு. J. சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் நிறுவனத்தின் நோக்கம்
இந்தத் திறப்பு விழாக்களில் உரையாற்றிய செயல் இயக்குனர் திரு. K. தியாகராஜன் அவர்கள், பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே நிறுவனத்தின் நோக்கம் என்று குறிப்பிட்டார்.


