Close Menu
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • முகப்பு
  • உணவகங்கள்
  • அடுமனை / பேக்கரி
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • சங்கங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • அயலக உணவகங்கள் 
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
  • எங்களை தொடர்பு கொள்ள
  • English News
சூடான செய்திகள்

பாரதத்தின் பண்டைய தானியங்களும், மசாலாப் பொருட்களும், ஏன் உலகின் நாவை சுவைக்கின்றன?

May 15, 2026

சர்வதேச விமான நிலைய அந்தஸ்து மற்றும் மருத்துவ சுற்றுலாவால் புதிய உத்வேகம் பெறும் மதுரை ஹோட்டல் துறை

April 11, 2026

கடலூரில் முதல் கிளையைத் தொடங்கியது ‘நானாஸ்’ இனிப்பகம்

April 4, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook Instagram YouTube LinkedIn
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • முகப்பு
  • உணவகங்கள்
  • அடுமனை / பேக்கரி
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • சங்கங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • அயலக உணவகங்கள் 
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
  • எங்களை தொடர்பு கொள்ள
  • English News
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • அடுமனை / பேக்கரி
  • அயலக உணவகங்கள் 
  • உணவகங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
Home»சங்கங்கள்»2026 முதல் தமிழ்நாட்டில் பிரம்மாண்ட ‘HoReCa’ கண்காட்சி: தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் (TNHA) அதிரடி அறிவிப்பு!
சங்கங்கள்

2026 முதல் தமிழ்நாட்டில் பிரம்மாண்ட ‘HoReCa’ கண்காட்சி: தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் (TNHA) அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் (TNHA) நடத்தும் பிரம்மாண்ட கண்காட்சி 2026 - முழு விபரம்
Shalini ChandrasekarBy Shalini ChandrasekarJanuary 21, 2026No Comments2 Mins Read18 Views
Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link

– எழுதியது சொக்கப்பன் ஸ்ரீநிவாசன்  [மொழியாக்கம் – ஷாலினி சந்திரசேகரன் ]

இந்தியாவின் மிக முக்கிய விருந்தோம்பல் அமைப்பான தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் (TNHA), 2026-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் பிரம்மாண்டமான தொழில்முறை கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்வை நடத்தத் திட்டமிட்டுள்ளது. தற்சார்பு பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும், நாட்டின் ‘ஹோரெகா’ (HoReCa – Hotels, Restaurants and Catering) துறையில் தமிழ்நாட்டின் தலைமைத்துவத்தைப் பறைசாற்றவும் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

கிட்சன் ஹெரால்டு உடனான பிரத்யேக நேர்காணலில், TNHA தலைவர் எம். வெங்கடசுப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டார். இக்கண்காட்சியின் முதல் நிகழ்வு 2026 அக்டோபர் 1-ஆம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் (Chennai Trade Centre) நடைபெறவுள்ளது.

ஆஹார் (AAHAR) மாடலில் தமிழக அடையாளம்

டெல்லியில் நடைபெறும் புகழ்பெற்ற ‘ஆஹார்’ சர்வதேச உணவு மற்றும் விருந்தோம்பல் கண்காட்சியை முன்மாதிரியாகக் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • தென்னிந்திய கவனம்: தென்னிந்திய சமையல் மரபுகள், உபகரண கண்டுபிடிப்புகளுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
  • அண்டை மாநிலங்களின் பங்கேற்பு: ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தொழில்துறையினரும் இதில் பங்கேற்பார்கள்.
  • நேரடி செயல்விளக்கங்கள்: சமையல் கலைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர் பங்கேற்கும் நேரடி தயாரிப்பு விளக்கங்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் அரங்குகள் இடம்பெறும்.

தற்சார்பு பொருளாதாரத்தின் அடுத்த கட்டம்

அண்மையில் அமெரிக்க தயாரிப்புகளைப் புறக்கணித்து, போவண்டோ (Bovonto), கேம்பா கோலா (Campa Cola) போன்ற உள்நாட்டுப் பானங்களையும், ‘சாரோஸ்’ (Zaaroz) போன்ற உள்ளூர் டெலிவரி தளங்களையும் ஊக்குவித்த TNHA-வின் அடுத்த கட்ட நகர்வாக இது பார்க்கப்படுகிறது.

இது குறித்து வெங்கடசுப்பு கூறுகையில், “வெளிநாட்டுப் பான நிறுவனங்கள் நம் நாட்டு நீர் ஆதாரங்களைச் சுரண்டி, பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து நமக்கே விற்கின்றன. இது நமது வளங்களுக்குச் செய்யும் கேடு. இந்த ஏமாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, நமது உள்நாட்டு பிராண்டுகளின் வலிமையைக் கொண்டாடும் தளமாக இந்தக் கண்காட்சி அமையும்,” என்றார்.

கொள்கை, முன்னேற்றம் மற்றும் கூட்டாண்மைக்கான ஒரு தளம்

இந்தக் கண்காட்சி வெறும் வர்த்தக நிகழ்வாக மட்டுமல்லாமல், ஜிஎஸ்டி (GST), உரிமம் பெறுதல் மற்றும் வரி விதிப்பு போன்ற துறையில் உள்ள சவால்கள் குறித்து அரசுடன் உரையாடுவதற்கான ஒரு தளமாகவும் இருக்கும்.

மேலும், இளைஞர்களிடையே நிலவும் மனப்பான்மை மாற்றம் குறித்துக் கவலை தெரிவித்த வெங்கடசுப்பு, “திறன் மேம்பாடு என்பது வெறும் பயிற்சியோடு நின்றுவிடக் கூடாது. அர்ப்பணிப்பு உணர்வோடு கூடிய மனமாற்றமும் அவசியம். அதற்கான விழிப்புணர்வு அமர்வுகளும் இந்தக் கண்காட்சியில் இடம்பெறும்” என்று குறிப்பிட்டார்.

சுமார் ஒரு லட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ள தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம், அக்டோபர் 1-ஐ நிரந்தர வருடாந்திர நிகழ்வாக மாற்றி, தென்னிந்தியாவின் விருந்தோம்பல் துறைக்கான நுழைவுவாயிலாகத் தமிழ்நாட்டை பெருமைப்படுத்த தயாராகி வருகிறது.

AAHAR Exhibition Model Chennai Trade Centre HoReCa India Hospitality Exhibition M. Venkadasubbu South Indian Food Industry Tamil Nadu Hotels Association TNHA
Share. Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link
Previous Articleதெற்காசியாவிலேயே முதன்முறை – ‘எட்ஜ் ஜீரோ கார்பன்’ சான்றிதழ் பெற்று சென்னை தாஜ் வெல்லிங்டன் மியூஸ் சாதனை!
Next Article சவால்களைச் சந்திக்கும் தமிழக பேக்கரித் தொழில் – தமிழ்நாடு பேக்கர்ஸ் பெடரேஷன் தலைவர் எஸ். பாண்டுரங்கன்!
Shalini Chandrasekar

    தொடர்புடைய பதிவுகள்

    சர்வதேச விமான நிலைய அந்தஸ்து மற்றும் மருத்துவ சுற்றுலாவால் புதிய உத்வேகம் பெறும் மதுரை ஹோட்டல் துறை

    April 11, 2026

    அடுமனைகளின் நலன் கருதி இயற்கை எரிவாயுவிற்கு முன்னுரிமை அளிக்க IBF கோரிக்கை

    March 17, 2026

    டெல்லியில் எகிறும் ஹோட்டல் வாடகை – மத்திய அமைச்சர் அவசர ஆலோசனை

    February 11, 2026

    ஊட்டியில் சாத்தியமானது ஏற்காட்டில் ஏன் இல்லை? – பிளாஸ்டிக் மாசுபாட்டால் வீழ்ச்சியடையும் உணவகங்கள்

    February 9, 2026
    Leave A Reply Cancel Reply

    தேடுங்கள்
    Follow Us On Social Media
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    சமீபத்திய முக்கிய செய்திகள்
    Uncategorized
    5 Mins Read2 Views

    பாரதத்தின் பண்டைய தானியங்களும், மசாலாப் பொருட்களும், ஏன் உலகின் நாவை சுவைக்கின்றன?

    By Swaminathan BalasubramanianMay 15, 20260

    — ஆர். சங்கரன் கர்நாடகத்தின் கேழ்வரகு வயல்களிலிருந்து சிங்கப்பூரின் உயரிய கடைகள் வரை — பாரதத்தின் பண்டைய தானியங்களும் பாரம்பரிய…

    சர்வதேச விமான நிலைய அந்தஸ்து மற்றும் மருத்துவ சுற்றுலாவால் புதிய உத்வேகம் பெறும் மதுரை ஹோட்டல் துறை

    April 11, 2026

    கடலூரில் முதல் கிளையைத் தொடங்கியது ‘நானாஸ்’ இனிப்பகம்

    April 4, 2026

    பனிக்கூழ் உலகில் இரு தசாப்தங்கள் தொடும் ஒரு சகாப்தம்; ‘சாம்பியன் ‘ இனி டெல்டா முழுவதும்

    March 17, 2026
    வலைப்பதிவு வகைகள்
    • Uncategorized (6)
    • அடுமனை / பேக்கரி (4)
    • அயலக உணவகங்கள்  (1)
    • உணவகங்கள் (28)
    • உணவு உற்பத்தியாளர்கள் (8)
    • சங்கங்கள் (10)
    • விநியோகஸ்தர்கள் (4)
    வலைப்பதிவு காப்பகங்கள்
    • May 2026 (1)
    • April 2026 (2)
    • March 2026 (4)
    • February 2026 (20)
    • January 2026 (21)
    • December 2025 (3)
    • November 2025 (7)
    கிச்சன் ஹெரால்ட்
    கிச்சன் ஹெரால்ட்

    கிச்சன் ஹெரால்ட் என்பது இந்திய சமையல்காரர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், உணவு கையாளுபவர்கள் சமூகம் மற்றும் உலகளாவிய சமையல் சமூகத்திற்கான முன்னணி B2B டிஜிட்டல் ஊடகமாகும். நாங்கள் உலகளாவிய உணவுத் துறையைக் கண்காணித்து, எங்கள் வாசகர்களுக்கு சமீபத்திய செய்திகள், வேலை காலியிடங்கள் நேர்காணல்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்குகிறோம். முக்கியமாக ஹோட்டல் உரிமையாளர்கள், சமையல்காரர்கள், பேக்கரி உரிமையாளர்கள், உணவு உற்பத்தியாளர்கள், கொள்முதல் மேலாளர்கள், விநியோகஸ்தர்கள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் பலவற்றைச் சென்றடையும் நாங்கள், HoReCA பிரிவுக்கு மிகவும் விரும்பப்படும் உணவு போர்டல்.

    Facebook Instagram YouTube LinkedIn
    வலைப்பதிவு வகைகள்
    • Uncategorized (6)
    • அடுமனை / பேக்கரி (4)
    • அயலக உணவகங்கள்  (1)
    • உணவகங்கள் (28)
    • உணவு உற்பத்தியாளர்கள் (8)
    • சங்கங்கள் (10)
    • விநியோகஸ்தர்கள் (4)
    பயனுள்ள இணைப்புகள்
    • முகப்பு
    • எங்கள் எழுத்தாளர்கள்
    • எங்கள் நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
    • எங்களை தொடர்பு கொள்ள
    • தனியுரிமைக் கொள்கை
    பதிப்புரிமை © 2021-2026 - கிச்சன் ஹெரால்ட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
    உங்கள் நிறுவனத்திற்கான தொழில்முறை வலைத்தளத்தை DotBrix இலிருந்து பெறுங்கள்.

    Type above and press Enter to search. Press Esc to cancel.