இந்தியாவின் முன்னணி மசாலா உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனமான SNN புட்ஸ் பிரைவேட் லிமிடெட் (SNN Foods Pvt Ltd), தனது புதிய தயாரிப்பான ‘SNN பெருங்காயத் தூளை’ (SNN Hing Powder) கர்நாடக மாநிலம் பிஜாப்பூரில் அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் மண்டல விரிவாக்கத் திட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியாக, வட கர்நாடகாவின் வளமான உணவுப் பாரம்பரியம் மற்றும் வளர்ந்து வரும் சில்லறை வர்த்தகச் சந்தையைக் குறிவைத்து இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறப்பான அறிமுக விழா
பிஜாப்பூரில் நடைபெற்ற இந்த அறிமுக விழாவில் விநியோகஸ்தர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் உணவுத் துறை சார்ந்த வல்லுநர்கள் எனப் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்திய சமையலில் நறுமணத்திற்காகவும், செரிமானத்திற்காகவும் பெருங்காயம் (Asafoetida) ஒரு தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது. வீடுகள் முதல் உணவகங்கள் வரை அனைவராலும் பயன்படுத்தப்படும் இந்தத் தயாரிப்பை, நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் SNN ஃபுட்ஸ் உருவாக்கியுள்ளது. இதன் மூலம் பருப்பு வகைகள், சாம்பார் மற்றும் ஊறுகாய் போன்ற பாரம்பரிய உணவுகளில் நிலையான சுவையையும் தரத்தையும் வழங்க முடியும் என நிறுவனம் உறுதியளிக்கிறது.
பெங்களூரு டூ பிஜாப்பூர்
பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் SNN புட்ஸ், முழு மசாலாப் பொருட்கள், மசாலாத் தூள்கள் (Blended Masalas) மற்றும் ‘ரெடி-டு-குக்’ உணவுகள் என தனது அனைத்துத் தயாரிப்புகளிலும் தூய்மை மற்றும் தரத்திற்காகப் பெயர் பெற்றது. இதுமட்டுமின்றி, ஹோட்டல்கள், உணவகங்கள் (HoReCa) மற்றும் பிற வணிக நிறுவனங்களுக்கு (B2B) அவர்களின் தேவைக்கேற்ற தயாரிப்புகளையும் வழங்கி வருகிறது.

நிர்வாக இயக்குநரின் கருத்து
இந்த அறிமுகம் குறித்து SNN புட்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. வினோத் குமார் NV கூறுகையில்:
“இந்தியச் சமையலறைகளில் பெருங்காயம் ஒரு அன்றாடத் தேவை. நுகர்வோர் தாங்கள் நம்பும் பிராண்டுகளிடம் இருந்து தூய்மையையும் தரத்தையும் எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் விதமாகவே SNN பெருங்காயத் தூளை நாங்கள் அறிமுகம் செய்துள்ளோம். எங்களைப் பொறுத்தவரை பிஜாப்பூர் ஒரு முக்கியமான சந்தை, இந்த அறிமுகம் வட கர்நாடகாவில் எங்களது இருப்பை மேலும் வலுப்படுத்தும்” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், “குறுகிய கால லாபத்தை விட நீண்ட கால மதிப்பைக் கட்டியெழுப்புவதிலேயே நாங்கள் கவனம் செலுத்துகிறோம். ஒவ்வொரு புதிய தயாரிப்பும் தரம் மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையின் மீதான எங்களது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது,” என்றார்.
எதிர்காலத் திட்டம்
இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களை (Tier-2 & Tier-3) மையமாகக் கொண்டு தனது வணிகத்தை விரிவாக்கி வரும் SNN புட்ஸ், மேம்பட்ட உற்பத்தித் திறன் மற்றும் சர்வதேசத் தரக் கட்டுப்பாடுகளில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. இது நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனைக்கும், உலகளாவிய ஏற்றுமதி வணிகத்திற்கும் பெரும் பக்கபலமாக அமையும்.

