Close Menu
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • முகப்பு
  • உணவகங்கள்
  • அடுமனை / பேக்கரி
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • சங்கங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • அயலக உணவகங்கள் 
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
  • எங்களை தொடர்பு கொள்ள
சூடான செய்திகள்

சிறுதானிய திண்பண்டத்தை விரைவில் அறிமுகப்படுத்தும் ’அரவிந்த் செட்டிநாடு ஸ்நாக்ஸ்’

February 7, 2026

கேரளாவின் தேக்கடியில் புதிய ஹோட்டல்: தி ஃபெர்ன் ரெசிடென்சி அறிமுகம்

February 6, 2026

பிஜாப்பூரில் ‘SNN பெருங்காயத் தூள்’ அறிமுகம்: கர்நாடகாவில் தனது வணிகத்தை விரிவுபடுத்தும் SNN புட்ஸ்

February 6, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook Instagram YouTube LinkedIn
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • முகப்பு
  • உணவகங்கள்
  • அடுமனை / பேக்கரி
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • சங்கங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • அயலக உணவகங்கள் 
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
  • எங்களை தொடர்பு கொள்ள
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • அடுமனை / பேக்கரி
  • அயலக உணவகங்கள் 
  • உணவகங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
Home»உணவு உற்பத்தியாளர்கள்»சிறுதானிய திண்பண்டத்தை விரைவில் அறிமுகப்படுத்தும் ’அரவிந்த் செட்டிநாடு ஸ்நாக்ஸ்’
உணவு உற்பத்தியாளர்கள்

சிறுதானிய திண்பண்டத்தை விரைவில் அறிமுகப்படுத்தும் ’அரவிந்த் செட்டிநாடு ஸ்நாக்ஸ்’

அரவிந்த் செட்டிநாடு ஸ்நாக்ஸ்: பாரம்பரிய சுவையில் புதிய சிறுதானிய பலகாரங்கள்
Shalini ChandrasekarBy Shalini ChandrasekarFebruary 7, 2026No Comments3 Mins Read12 Views
Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link
Aravind Chettinad Snacks
ஆர்.திண்ணப்பன்
Share
Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link

                                                                        இந்தக் கட்டுரையை வழங்குபவர்கள்

இந்தக் கட்டுரையை வழங்குபவர்

பாரம்பரிய திண்பண்டங்களை தயாரித்து வரும் ‘அரவிந்த் செட்டிநாடு ஸ்நாக்ஸ்’ நிறுவனம், ஆரோக்கியமாகவும் இன்றைய ஜென் – ஸீ தலைமுறையினர் விரும்பக் கூடியதாகவும் இருக்கும் வகையில், விரைவில் தங்களது புதிய பலகாரம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளனர்.

தமிழகத்தின் பாரம்பரிய சுவைகளில் ஒன்றான செட்டிநாடு பலகாரங்கள், இன்றைய துரித உணவு (Fast Food) கலாச்சாரத்திலும் தன் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளன. இதனை மையமாக வைத்து, கடந்த 23 ஆண்டுகளாக தரம் மாறாத செட்டிநாடு பலகாரங்களை தயாரித்து வரும் ’அரவிந்த் செட்டிநாடு ஸ்நாக்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்.திண்ணப்பன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

​நவீன இயந்திரங்கள் வந்தாலும், சுவை மாறாமல் இருக்க தங்களது நிறுவனம் இன்றும் பாரம்பரிய முறையையே பின்பற்றுவதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக, அரிசியை ஊற வைத்து, அரைத்து, வறுத்து செய்யும் பழைய முறையை மாற்றவில்லை. கை முறுக்கு, மாவு உருண்டை, மனோகலம், அதிரசம் போன்ற ’சீர் பலகாரங்கள்’ அதிக அளவில் ஆர்டர் செய்யப்படுவதாகவும், நார்மல் திண்பண்டங்கள் அடங்கிய சீர் பலகாரங்களையும் தாங்கள் செய்துத் தருவதாகவும் திண்ணப்பன் தெரிவித்தார்.

​ஆரோக்கியத்தில் கவனம்

​இன்றைய தலைமுறையினரின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, சிறுதானியங்களில் (Millets) லட்டு போன்ற வகைகளை அறிமுகப்படுத்தி வருவதாக அவர் கூறினார். அதோடு ’ஜென் – ஸீ’ தலைமுறையினரை கவரும் நோக்கில் புதிய திண்பண்டம் ஒன்று சோதனையில் இருப்பதாகவும், அடுத்த மாதம் அது சந்தையில் அறிமுகமாகும் எனவும் தெரிவித்தார்.

​”ரத்த சோகையை குணப்படுத்தும் நோக்கில் தற்போது தினை லட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து கம்பு போன்ற மற்ற சிறுதானியங்களிலும் பலகாரங்கள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது” என்றார் திண்ணப்பன்.

தேன்குழல்

தமிழகம் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் செட்டிநாடு பலகாரங்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது என்ற அவர், சிங்கப்பூர், மலேசியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளுக்கு தங்களது தயாரிப்புகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக தெரிவித்தார். அதோடு ’அரவிந்த் செட்டிநாடு ஸ்நாக்ஸ்’ தயாரிப்புகள் தமிழகம் முழுவது கிடைக்கிறது.

​”வெளிநாட்டிற்கு எங்கள் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யும்போது பேக்கேஜிங்கில் நைட்ரஜன் கேஸ் ஃபிளஷிங் (Nitrogen Gas Flushing) முறை பயன்படுத்தப்படுகிறது. தவிர, இதில் எவ்வித பதப்படுத்தும் வேதிப்பொருட்களும் (Preservatives) சேர்க்கப்படுவதில்லை” என்றார்.

​சவால்கள் மற்றும் தீர்வுகள்

​பலகாரத் தொழிலில் உள்ள சவால்கள் குறித்து அவர் கூறுகையில், எண்ணெய் மற்றும் பருப்பு போன்ற மூலப்பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்தாலும், உடனடியாக விலையை ஏற்றாமல் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே சூழலுக்கு ஏற்ப விலை மாற்றம் செய்யப்படுகிறது, என்றார். அதோடு பொருள் வீணாவதை முடிந்தளவு கட்டுப்படுத்தினால் மட்டுமே இதை ஓரளவு சமாளிக்க முடியும் என்றார் திண்ணப்பன்.

​திண்பண்ட தொழிலில் இருக்கும் மற்றொரு சவாலைப் பற்றிப் பேசிய அவர், “உடை மாவாகும், பார்க்க நேர்த்தியாக இருக்க மாட்டோம் என்ற எண்ணத்தில் இன்றைய இளைஞர்கள் இந்த வேலைக்கு வர தயங்குவதால், இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை புகுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

அதோடு தங்களது தயாரிப்பு பிரிவில் 80% பெண் தொழிலாளர்களே பணிபுரிவதாகவும், அவர்களுக்கு ஏற்றவாறு இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பெருமையுடன் தெரிவித்தார்.

கை முறுக்கு

​புதிய தொழில் முனைவோருக்கான அறிவுரை

“உணவுத் தொழிலில் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல், தரம் மற்றும் சீரான சுவை (Consistency and Quality) ஆகியவற்றில் சமரசம் செய்யாமல் இருந்தால் மட்டுமே நீண்ட காலம் நிலைத்து நிற்க முடியும்” என உணவுத்துறையில் தொழில் தொடங்க ஆசைப்படும் இளைஞர்களுக்கு அக்கறையான அறிவுரை ஒன்றையும் தெரிவித்தார்.

                                                                      இந்தக் கட்டுரையை வழங்குபவர்கள்

 

Aravind Snacks Chettinad Snacks Food Industry Healthy Snacks Millets Tamil Nadu Business Traditional Food சிறுதானியங்கள் செட்டிநாடு சுவை தமிழ்நாடு தொழில்
Share. Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link
Previous Articleகேரளாவின் தேக்கடியில் புதிய ஹோட்டல்: தி ஃபெர்ன் ரெசிடென்சி அறிமுகம்
Shalini Chandrasekar

    தொடர்புடைய பதிவுகள்

    பிஜாப்பூரில் ‘SNN பெருங்காயத் தூள்’ அறிமுகம்: கர்நாடகாவில் தனது வணிகத்தை விரிவுபடுத்தும் SNN புட்ஸ்

    February 6, 2026

    ஹோட்டல்களுக்குத் தரமான பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானிய மாவு விநியோகிக்கும் ’மண்வாசனை’ மேனகா

    February 5, 2026

    பட்ஜெட் 2026: தமிழக உணவு மற்றும் சுற்றுலாத் துறைக்குக் கிடைத்துள்ள பெரும் வாய்ப்புகள்

    February 2, 2026

    கோவையில் பிப்ரவரி 9-ல் உணவு பதப்படுத்துதல் இலவச பயிற்சி!

    January 19, 2026
    Leave A Reply Cancel Reply

    தேடுங்கள்
    Follow Us On Social Media
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    சமீபத்திய முக்கிய செய்திகள்
    உணவு உற்பத்தியாளர்கள்
    3 Mins Read12 Views

    சிறுதானிய திண்பண்டத்தை விரைவில் அறிமுகப்படுத்தும் ’அரவிந்த் செட்டிநாடு ஸ்நாக்ஸ்’

    By Shalini ChandrasekarFebruary 7, 20260

                                 …

    கேரளாவின் தேக்கடியில் புதிய ஹோட்டல்: தி ஃபெர்ன் ரெசிடென்சி அறிமுகம்

    February 6, 2026

    பிஜாப்பூரில் ‘SNN பெருங்காயத் தூள்’ அறிமுகம்: கர்நாடகாவில் தனது வணிகத்தை விரிவுபடுத்தும் SNN புட்ஸ்

    February 6, 2026

    ஹோட்டல்களுக்குத் தரமான பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானிய மாவு விநியோகிக்கும் ’மண்வாசனை’ மேனகா

    February 5, 2026
    வலைப்பதிவு வகைகள்
    • Uncategorized (4)
    • அடுமனை / பேக்கரி (2)
    • அயலக உணவகங்கள்  (1)
    • உணவகங்கள் (23)
    • உணவு உற்பத்தியாளர்கள் (6)
    • சங்கங்கள் (6)
    • விநியோகஸ்தர்கள் (2)
    வலைப்பதிவு காப்பகங்கள்
    • February 2026 (12)
    • January 2026 (21)
    • December 2025 (3)
    • November 2025 (7)
    கிச்சன் ஹெரால்ட்
    கிச்சன் ஹெரால்ட்

    கிச்சன் ஹெரால்ட் என்பது இந்திய சமையல்காரர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், உணவு கையாளுபவர்கள் சமூகம் மற்றும் உலகளாவிய சமையல் சமூகத்திற்கான முன்னணி B2B டிஜிட்டல் ஊடகமாகும். நாங்கள் உலகளாவிய உணவுத் துறையைக் கண்காணித்து, எங்கள் வாசகர்களுக்கு சமீபத்திய செய்திகள், வேலை காலியிடங்கள் நேர்காணல்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்குகிறோம். முக்கியமாக ஹோட்டல் உரிமையாளர்கள், சமையல்காரர்கள், பேக்கரி உரிமையாளர்கள், உணவு உற்பத்தியாளர்கள், கொள்முதல் மேலாளர்கள், விநியோகஸ்தர்கள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் பலவற்றைச் சென்றடையும் நாங்கள், HoReCA பிரிவுக்கு மிகவும் விரும்பப்படும் உணவு போர்டல்.

    Facebook Instagram YouTube LinkedIn
    வலைப்பதிவு வகைகள்
    • Uncategorized (4)
    • அடுமனை / பேக்கரி (2)
    • அயலக உணவகங்கள்  (1)
    • உணவகங்கள் (23)
    • உணவு உற்பத்தியாளர்கள் (6)
    • சங்கங்கள் (6)
    • விநியோகஸ்தர்கள் (2)
    பயனுள்ள இணைப்புகள்
    • முகப்பு
    • எங்கள் எழுத்தாளர்கள்
    • எங்கள் நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
    • எங்களை தொடர்பு கொள்ள
    • தனியுரிமைக் கொள்கை
    பதிப்புரிமை © 2021-2026 - கிச்சன் ஹெரால்ட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
    உங்கள் நிறுவனத்திற்கான தொழில்முறை வலைத்தளத்தை DotBrix இலிருந்து பெறுங்கள்.

    Type above and press Enter to search. Press Esc to cancel.