Close Menu
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • முகப்பு
  • உணவகங்கள்
  • அடுமனை / பேக்கரி
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • சங்கங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • அயலக உணவகங்கள் 
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
  • எங்களை தொடர்பு கொள்ள
  • English News
சூடான செய்திகள்

பாரதத்தின் பண்டைய தானியங்களும், மசாலாப் பொருட்களும், ஏன் உலகின் நாவை சுவைக்கின்றன?

May 15, 2026

சர்வதேச விமான நிலைய அந்தஸ்து மற்றும் மருத்துவ சுற்றுலாவால் புதிய உத்வேகம் பெறும் மதுரை ஹோட்டல் துறை

April 11, 2026

கடலூரில் முதல் கிளையைத் தொடங்கியது ‘நானாஸ்’ இனிப்பகம்

April 4, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook Instagram YouTube LinkedIn
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • முகப்பு
  • உணவகங்கள்
  • அடுமனை / பேக்கரி
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • சங்கங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • அயலக உணவகங்கள் 
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
  • எங்களை தொடர்பு கொள்ள
  • English News
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • அடுமனை / பேக்கரி
  • அயலக உணவகங்கள் 
  • உணவகங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
Home»விநியோகஸ்தர்கள்»வணிக செயல்பாடுகளை விரிவாக்கம் செய்கிறது ‘FNB Needs’
விநியோகஸ்தர்கள்

வணிக செயல்பாடுகளை விரிவாக்கம் செய்கிறது ‘FNB Needs’

வணிக செயல்பாடுகளை விரிவாக்கம் செய்கிறது ‘FNB Needs’
Shalini ChandrasekarBy Shalini ChandrasekarJanuary 28, 2026No Comments3 Mins Read51 Views
Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link
D. Venkat Subramanian MD of FnB Needs Foods Private Limited
Share
Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link

இந்த கட்டுரையை வழங்குபவர்

பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு 2018-இல் தொடங்கப்பட்ட ‘FNB Needs’, தற்போது தனது சேவையை விரிவுபடுத்தி வருகிறது. உணவகங்கள், கேட்டரிங் மற்றும் உணவு சேவை நிறுவனங்களுக்குத் தேவையான உயர்தரமான, சுத்திகரிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தத் தயாராக உள்ள (Ready-to-use) காய்கறிகள், பால் பொருட்கள், மளிகைப் பொருட்கள் மற்றும் நறுமணப் பொருட்களை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

சமையலறை வேலைகளை எளிமையாக்கி, நேரத்தை மிச்சப்படுத்துவதே இவர்களின் முக்கிய நோக்கமாகும். தரம் மற்றும் புத்துணர்ச்சியில் சமரசம் செய்யாமல், நவீன தொழில்நுட்பத்துடன் பொருட்களை விநியோகிப்பதன் மூலம் சமையல் கலைஞர்களுக்குப் பெரும் உதவியாக உள்ளது. தற்போது பெங்களூரு மட்டுமின்றி சென்னை போன்ற நகரங்களிலும் தனது கிளைகளைத் தொடங்கி, உணவுத் துறையில் ஒரு நம்பகமான வணிகக் கூட்டாளராக இந்நிறுவனம் வளர்ந்து வருகிறது.

சமையலுக்குத் தேவையான மூலப்பொருட்கள், பால் பொருட்கள், பகுதி பதப்படுத்தப்பட்ட உணவுகளான (Semi processed foods) துருவிய தேங்காய், தோல் நீக்கிய வெங்காயம் போன்றவற்றை ஹோட்டல்களுக்கும், கேட்டரிங்குகளுக்கும் வழங்கும் FnB நீட்ஸ் ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் (FnB Needs Foods Private Limited) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டி.வெங்கட் சுப்பிரமணியன் அவர்கள், தங்களது நிறுவனம் மற்றும் துறை குறித்து நம்மிடம் பல சுவாரஸ்யமான விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துக் கொண்டார்.

QSR நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராக, ஐடி தலைவராக 36 ஆண்டுகள் அனுபவம் கொண்ட வெங்கட், F&B நிறுவனத்தைத் தொடங்கி 8 வருடங்களாகிறது. அவர் தனது அனுபவத்தை பகிர்ந்ததோடு, உணவுத் தொழிலில் இறங்க நினைக்கும் இளைய தலைமுறையினருக்கு சில அறிவுரைகளையும் வழங்கினார்.

Fnb நீட்ஸ் ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பணி என்ன?

நாங்கள் உணவுகளுக்கான மூலப் பொருட்கள், மளிகை சாமான்கள், பகுதி பதப்படுத்தப்பட்ட உணவுகளான (Semi processed foods) துருவிய தேங்காய், தோல் நீக்கிய வெங்காயம் போன்றவற்றை HoReCa எனக் குறிப்பிடக் கூடிய ஹோட்டல்களுக்கும், ரெஸ்டாரெண்டுகளுக்கும், கேட்டரிங்குகளுக்கும் மொத்தமாக வழங்குகிறோம். இன்னொன்று உற்பத்தியாளர்களின் பொருட்களை மொத்தமாக எங்கள் கிடங்கில் சேமித்து (Warehouse and logistics), அவர்கள் சொல்லும் இடங்களுக்கு சப்ளை செய்கிறோம். மற்றொன்று 3PA எனும் 3rd party agreement. ஒருவருக்கு 10 கடைகள் இருக்கிறது என்றால், அவர்களால் அத்தனை கடைக்கும் தேவையான பொருட்களை வாங்குவதில் சிரமங்களை சந்திப்பார்கள். அப்படியிருக்கும் பட்சத்தில் நாம் அவர்களின் தேவைகளை நமது கிடங்கின் மூலம் பூர்த்தி செய்கிறோம். இதனால் கிடங்கை நிர்வகிக்கும் வேலை அவர்களுக்கு இருக்காது.

நாங்கள் 2017-லிருந்து செயல்பட்டு வருகிறோம். இப்போது சென்னை, கோவை மற்றும் பெங்களூருவில் அலுவலகங்கள் உள்ளன. சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் கிடங்குகளும் இருக்கின்றன.

நீங்கள் சந்தித்த சவால்கள் என்ன?

எல்லா தொழில்களையும் போல, இதிலும் நிச்சயம் சவால்கள் இருக்கின்றன. என்ன பிரச்னை வந்தாலும் நீங்கள் கொடுத்த பொருட்களின் தரம், சரியான நேரத்திற்கு டெலிவரி, பணம் (Payment Terms) போன்றவை தான் உங்களை தொடர்ந்து நிலைக்க வைக்கும். 35 வருடங்களுக்கும் மேலாக நான் உணவுத் துறையில் இருக்கிறேன். ஆனால் வெவ்வேறு பிரிவுகளில் வேலை செய்துக் கொண்டிருந்தேன். அதோடு ஐடி நிறுவனத்திலும் துணைத்தலைவராக இருந்தேன். பின்னர் முழுநேரமாக உணவுத்துறையில் இறங்கிவிட்டேன்.

விரிவாக்கத் திட்டம் மற்றும் பிராண்டுகளுடனான உங்களின் இணைவு பற்றி?

2026-2027 முதல் காலாண்டில் எங்கள் கிடங்குகளை டெல்லி மற்றும் கொல்கத்தாவில் நிறுவ திட்டமிட்டிருக்கிறோம். பிராண்டுகள் குறித்து சொல்ல வேண்டுமென்றால், ‘அல்லானா ஃபுட் புராடெக்ட்ஸுடன்’ கேரி ஃபார்வர்டு ஏஜென்சியாக இணைப்பில் இருக்கிறோம். அவர்களின் ஹைதராபாத் மற்றும் பெங்களூரு கிடங்குகளை நாங்கள் நிர்வகிக்கிறோம். விரைவில் அவர்களின் கொச்சின் மற்றும் சென்னை கிடங்குகளும் இந்த பட்டியலில் இணையும். இது தவிர, பால் பொருட்கள், மளிகை பொருட்கள் என பலவற்றிற்கும் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம். ஒவ்வொரு நிறுவனத்துடனும் குறைந்தது 7-8 ஆண்டுகளாவது இணைப்பில் இருப்போம்.

உணவுத்துறையில் கால் பதிக்க நினைக்கும் இளைய தலைமுறையினருக்கு நீங்கள் தரும் அறிவுரை?

தொழில் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை, அதற்கான ஆர்வம் மட்டும் இருந்தால் போதும், அது உங்களை சரியாக வழிநடத்தும். அதை பின்பற்றினாலே போதும். குறிப்பாக இந்தத் துறையை பொறுத்தவரை நீங்கள் நன்றாக செய்தால், அதை விரிவுப்படுத்திக் கொண்டே போகலாம். எங்கெல்லாம் ஹோட்டல்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் நமக்கான தேவையும் இருக்கிறது. நாங்கள் இப்போது 3 இடங்களில் செயல்படுகிறோம். இன்னும் மற்ற ஊர்களில் விரிவுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

இந்த கட்டுரையை வழங்குபவர்

FnB Needs Foods Food Supply Chain HoReCa Semi processed foods Startup India Venkat Subramanian உணவு உணவு துறை சவால்கள் உணவுத்தொழில் வெங்கட் சுப்பிரமணியன்
Share. Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link
Previous Article‘தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு 2026’ – மாமல்லபுரத்தில் பிப்ரவரி 2, 3 தேதிகளில் நடைபெறுகிறது!
Next Article நெல்லை ’காப்பர் லீஃப் ஹோட்டல்’ நிறுவனம் மதுரை மற்றும் தூத்துக்குடியில் கிளைகளைத் தொடங்கத் திட்டம்
Shalini Chandrasekar

    தொடர்புடைய பதிவுகள்

    பனிக்கூழ் உலகில் இரு தசாப்தங்கள் தொடும் ஒரு சகாப்தம்; ‘சாம்பியன் ‘ இனி டெல்டா முழுவதும்

    March 17, 2026

    சொமேட்டோ, ஸ்விகிக்கு செக் – உணவு விநியோகத்தில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!

    February 12, 2026

    தமிழகத்தின் புகழ்பெற்ற ‘மன்னா’ பிராண்டைக் கைப்பற்றியது ரிலையன்ஸ்

    February 11, 2026

    திருச்சி MSME துறையில் அபரிமிதமான வளர்ச்சி: உணவு மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் சாதனை

    February 4, 2026
    Leave A Reply Cancel Reply

    தேடுங்கள்
    Follow Us On Social Media
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    சமீபத்திய முக்கிய செய்திகள்
    Uncategorized
    5 Mins Read2 Views

    பாரதத்தின் பண்டைய தானியங்களும், மசாலாப் பொருட்களும், ஏன் உலகின் நாவை சுவைக்கின்றன?

    By Swaminathan BalasubramanianMay 15, 20260

    — ஆர். சங்கரன் கர்நாடகத்தின் கேழ்வரகு வயல்களிலிருந்து சிங்கப்பூரின் உயரிய கடைகள் வரை — பாரதத்தின் பண்டைய தானியங்களும் பாரம்பரிய…

    சர்வதேச விமான நிலைய அந்தஸ்து மற்றும் மருத்துவ சுற்றுலாவால் புதிய உத்வேகம் பெறும் மதுரை ஹோட்டல் துறை

    April 11, 2026

    கடலூரில் முதல் கிளையைத் தொடங்கியது ‘நானாஸ்’ இனிப்பகம்

    April 4, 2026

    பனிக்கூழ் உலகில் இரு தசாப்தங்கள் தொடும் ஒரு சகாப்தம்; ‘சாம்பியன் ‘ இனி டெல்டா முழுவதும்

    March 17, 2026
    வலைப்பதிவு வகைகள்
    • Uncategorized (6)
    • அடுமனை / பேக்கரி (4)
    • அயலக உணவகங்கள்  (1)
    • உணவகங்கள் (28)
    • உணவு உற்பத்தியாளர்கள் (8)
    • சங்கங்கள் (10)
    • விநியோகஸ்தர்கள் (4)
    வலைப்பதிவு காப்பகங்கள்
    • May 2026 (1)
    • April 2026 (2)
    • March 2026 (4)
    • February 2026 (20)
    • January 2026 (21)
    • December 2025 (3)
    • November 2025 (7)
    கிச்சன் ஹெரால்ட்
    கிச்சன் ஹெரால்ட்

    கிச்சன் ஹெரால்ட் என்பது இந்திய சமையல்காரர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், உணவு கையாளுபவர்கள் சமூகம் மற்றும் உலகளாவிய சமையல் சமூகத்திற்கான முன்னணி B2B டிஜிட்டல் ஊடகமாகும். நாங்கள் உலகளாவிய உணவுத் துறையைக் கண்காணித்து, எங்கள் வாசகர்களுக்கு சமீபத்திய செய்திகள், வேலை காலியிடங்கள் நேர்காணல்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்குகிறோம். முக்கியமாக ஹோட்டல் உரிமையாளர்கள், சமையல்காரர்கள், பேக்கரி உரிமையாளர்கள், உணவு உற்பத்தியாளர்கள், கொள்முதல் மேலாளர்கள், விநியோகஸ்தர்கள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் பலவற்றைச் சென்றடையும் நாங்கள், HoReCA பிரிவுக்கு மிகவும் விரும்பப்படும் உணவு போர்டல்.

    Facebook Instagram YouTube LinkedIn
    வலைப்பதிவு வகைகள்
    • Uncategorized (6)
    • அடுமனை / பேக்கரி (4)
    • அயலக உணவகங்கள்  (1)
    • உணவகங்கள் (28)
    • உணவு உற்பத்தியாளர்கள் (8)
    • சங்கங்கள் (10)
    • விநியோகஸ்தர்கள் (4)
    பயனுள்ள இணைப்புகள்
    • முகப்பு
    • எங்கள் எழுத்தாளர்கள்
    • எங்கள் நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
    • எங்களை தொடர்பு கொள்ள
    • தனியுரிமைக் கொள்கை
    பதிப்புரிமை © 2021-2026 - கிச்சன் ஹெரால்ட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
    உங்கள் நிறுவனத்திற்கான தொழில்முறை வலைத்தளத்தை DotBrix இலிருந்து பெறுங்கள்.

    Type above and press Enter to search. Press Esc to cancel.